தேவையானவை
ரொட்டி துண்டுகள் - 4
முட்டை - 2
வெங்காயம் - 1/4 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது( பொடியாக நறுக்கியது)
மல்லித்தளை - ஒரு கைப்பிடி(பொடியாக நறுக்கியது)
உப்பு
மிளகுத்தூள்
செய்முறை
- முட்டையை உடைத்து நன்கு அடித்து வைக்கவும்.
- வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை,மல்லித்தளை, உப்பு, மிளகுத்தூள் அனைத்தையும் சேர்த்து ஒரு அகலமான பாத்திரத்தில் கலக்கவும்.
- நான் ஸ்டிக் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
- ரொட்டியை, முட்டை கலவையில் முக்கி எடுத்து வெங்காயம் கலவை இரு புறமும் படியுமாறு, எடுத்து தோசைக்கல்லில் போடவும்.
- சிறு தீயில்2 நிமிடம் வேக விட்டு திருப்பி போட்டு மறுபடியும் 2 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
காலைஉணவுக்கு ஏற்ற சத்தான ஈசியான உணவு.
8 பேர் ருசி பாத்துட்டாங்க:
இவ்வளவு சீக்கிரமா??????? நான் போஸ்ட் பண்ணி 1 நிமிஷம் கூட ஆகல!!. டோஸ்ட் உங்களுக்குதான்.
அருமை.
நன்றிங்க ஆசியா!!!!!
ப்ரெட் டோஸ்ட் நல்லா இருக்கு.ஈசி ப்ரேக்பாஸ்ட்!
Thank you for the recipe.
நன்றி மகி!!!
நன்றி சித்ரா!!!!
Good breakfast.
ப்ரெட் டோஸ்ட் சூப்பராகயிருக்குப்பா...
Post a Comment