இது கொங்கு நாடு ஸ்பெசல் கொள்ளுப்பொடி.
தேவையானவை
கொள்ளு - 1 கப்
சின்ன வெங்காயம் - 6 -8 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4(நறுக்கியது)
கறிவேப்பிலை
பூண்டு - 1 பல்லு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
உப்பு
செய்முறை
- கொள்ளை சுத்தம் செய்து 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 6 விசில் விடவும்.
- பிறகு தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு (ரசத்துக்கு உபயோகிக்கலாம்) கொள்ளை உலர விடவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு மல்லி, சீரகம் தாளித்து சின்ன வெங்காயத்தில் பாதியையும், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுக்கவும்.
- வதக்கி எடுத்தவற்றுடன் உலர வைத்த கொள்ளு மற்றும் மீதி உள்ள சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும்.
சாதம் மற்றும் நெய்யுடன் சாப்பிட அருமையாக இருக்கும். பச்சை வெங்காயம் சேர்ப்பதால் நல்ல ருசியாக இருக்கும். நான் அதிக நேரம் உலர வைக்காம செஞ்சுட்டேன் இல்லேன்னா இன்னும் உதிரியாக வரும்.
என் சிறுவயதில் கொள்ளுப்பொடி செய்யும் போது மிக்ஸியில் அரைக்க மாட்டாங்க. உரலில் இடித்து எடுப்பாங்க. இப்ப நிறைய பேருக்கு உரல் எப்படி இருக்கும்னே தெரியாது.
ஒரு சின்ன சோகம் இதுல, கொள்ளு US ல கிடைக்கறதில்ல. இனி இந்தியா போயிட்டு வரப்ப இதையும் கொண்டு வரணும்.
14 பேர் ருசி பாத்துட்டாங்க:
புதுசா இருக்கு இந்த பொடி!! செய்து பார்க்கிறேன்...
என்னுடைய தோழி வீட்டில் இதனையும் இத்துடன் கொள்ளு ரசம் வைத்து சாப்பிடுவாங்க.....இதனை துவையல் என்று தானே சொல்லுவாங்க....இங்க தான் இந்தியன் கடைகளில் கிடைக்கின்றதே...கொள்ளு பொடி டாப் டக்கர்...அருமை...
ஒரு சின்ன சோகம் இதுல, கொள்ளு US ல கிடைக்கறதில்ல. இனி இந்தியா போயிட்டு வரப்ப இதையும் கொண்டு வரணும்.
.... It is available in US Indian stores. Thats where I buy. :-)
சாதம் மற்றும் நெய்யுடன் சாப்பிட அருமையாக இருக்கும். பச்சை வெங்காயம் சேர்ப்பதால் நல்ல ருசியாக இருக்கும்.
..... yummy!
உரல்ல இடிச்ச கொள்ளுப்பொடிய ஞாபகப்படுத்திவிட்டுட்டீங்க.சூப்பரா இருக்கு!
நானும் இங்கே கொள்ளை தேடித்தேடி சலித்துப்போச்சு..போனமுறை கொள்ளு-ன்னு நினைத்து தோலுடன் இருக்கும் மசூர்பருப்பை வாங்கிவந்து ஏமாந்துபோயிட்டேன்..:(:(
நன்றி மேனகா!!!
@ கீதா, நன்றி!!அடுத்த ரெசிபி கொள்ளு ரசம்தான். ஆஸ்டின்ல எந்த கடையிலயும் கொள்ளு கிடைக்க மாட்டேங்குது.
@ சித்ரா!! நன்றி!!!இங்கே எல்லா க்கடையிலயும் கேட்டு பாத்துட்டேன். கிடைக்கல!!
@ மகி நன்றி!!! மிக்ஸில செய்யறது, உரல்ல இடிக்கறமாதிரி வராது!!
deivasuganthi .try from srilankan asian shops.most of srilankan shops have kollu/horse gram.i buy from tamil shops to make kollu rasam .its very good when u have cold.
@ மதி, இல்லைங்க ரெண்டும் வேற வேற .
@angelin , முயற்சி பண்ணி பாக்கறன்ங்க!! நன்றி!!!
இப்ப உரலா அப்படின்னா என்ன என கேட்பார்க்ள்
நல்ல இருக்கு கொள்ளு பொடி
ஆமாங்க ஜலீலா நன்றிங்க!!!
சுகந்தி இன்னிக்கு இந்த பொடியும் செய்தேன்...எப்படி சொல்றதுன்னு தெரியல..ரொம்ப சூப்பரா இருந்தது.எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.நன்றி உங்களுக்கு...
நன்றி மேனகா!! Healthyயும் கூட!!!
I like kollu but we can't get in melbourne.
I searched in ur Blog for sambar powder,i tried some,nothing worked properly.If possible post or send me ur recipe.
Anu i use normal chilly pdr with little sakthi masala sambar pdr.
Post a Comment