- மொச்சையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு அதைக்கழுவி குக்கரில் வைத்து 6 விசில் விட்டு வேக விடவும்.
- வதக்கி அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி நன்கு அரைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பிறகு கத்தரிக்காய் சேர்த்து வதக்கி, அதில் அரைத்த விழுதில் பாதியை சேர்த்து , புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
- அதில் வேகவைத்த மொச்சை மற்றும் மீதி உள்ள அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.
Monday, January 17, 2011
மொச்சைக்கொட்டை கத்தரிக்காய் குழம்பு
Wednesday, November 17, 2010
மோர்க்குழம்பு
- அரைக்க கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- அத்துடன் புளித்த மோர் , உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் வைத்து கடுகு, தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- அதில் கலந்து வைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
Friday, August 20, 2010
பூண்டு குழம்பு
தேவையானவை:
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 25 பல் (தோல் நீக்கி நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
புளித்தண்ணீர் - 1 கப்
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது
தேங்காய் - 1 டீஸ்பூன்
(நன்கு வறுத்து அரைக்கவும்)
செய்முறை:
- கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருள்களை போட்டு, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும், புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அரைத்த விழுதை சேர்த்து, சிறிது நீர் சேர்த்து , நன்கு கொதிக்க விட்டு எடுக்கவும்.
சாதம், உப்பு பருப்பு, பூண்டு குழம்போட நல்லா இருக்கும். செஞ்சு 2 நாள் கழிச்சு சாப்பிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
கத்தரிக்காய் அல்லது கோவைக்காய் சேர்த்தூம் செய்யலாம்.
Tuesday, May 11, 2010
பாசிப்பருப்பு செளசெள கூட்டு
தேவையானவை
- பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து மலர வேகவிடவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து , வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- அதில் நறுக்கிய காய் சேர்த்து வதக்கவும்.
- காய் நன்கு வதங்கியதும் அதில் பருப்பு, மற்றும் அரைத்தவற்றையும் சேர்த்து கொதிக்க விடவும்.
சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
Monday, November 23, 2009
கீரை(Spinach) கடைசல்
- கீரையை கழுவி சிறிது தண்ணீர் விட்டு மூடி போட்டு நன்கு வேக வைக்கவும். (தண்ணீர் மிகவும் குறைவாக வைக்கவும்.)
- ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- கீரையையும், வதக்கியவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். (2 அல்லது 3 சுத்து விட்டால் போதும். ரொம்ப அரைக்க வேண்டாம்).
சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லா இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்க சிறிது வெண்ணெய் சேர்த்து அரைத்து கொடுக்கலாம். என் குழந்தைங்க ரெண்டு பேருக்கும் மிகவும் பிடித்தமானது இது. செய்வதற்கும் சுலபமானது.
Wednesday, October 28, 2009
பாசிப்பயறும் பூசணிக்காயும்
தேவையானவை
செய்முறை
- பாசிப்பயறை குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மல்லி தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதில் பூசணிக்காயை சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.
- பூசணிக்காய் வெந்ததும் வேக வைத்த பாசிப்பயறை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
Friday, October 2, 2009
வெண்டைக்காய் புளி குழம்பு
தேவையானவை
வெண்டைக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1/2
கறிவேப்பிலை
பூண்டு - 5 பல்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
புளித்தண்ணீர் - 1/4 கப்
உப்பு
பெருங்காயத்தூள் - சிறிது
தேங்காய்ப்பால் -1/4 கப்
கடுகு
வெந்தயம்
உப்பு
எண்ணெய்
செய்முறை
- வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு , சிறு தீயில் நன்கு வதக்கி எடுக்கவும்.
- கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- அதில் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் , புளித்தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்ததும், தேங்காய்ப்பால் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
- நன்கு சுண்டியதும் இறக்கிவிடவும்.
பருப்பு சாதம், அல்லது வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.
Monday, July 6, 2009
சுரைக்காய் கடைசல்
தேவையானவை
- குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி அத்துடன் சுரைக்காய், தக்காளி சேர்த்து சிறிது வதக்கவும்
- அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, புளி கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி போட்டு 2 விசில் வரும்வரை விட்டு எடுக்கவும்.
- ஆறியதும் பருப்பு மத்து வைத்து நன்கு கடைந்து விட்டு மல்லித்தளை தூவி வைக்கவும்.
இது உப்புமா மற்றும் வெண்பொங்கலுக்கு நல்ல combination. இட்லி, தோசைக்கும் நல்லா இருக்கும்.
Thursday, June 25, 2009
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
சீரகம் - 1 டீஸ்பூன்
- கத்தரிக்காயை காம்பை நறுக்காமல், அதன் அடி பாகத்தை நான்காக கீறி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வதக்கி எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, வெந்தயம் சேர்த்து சிறு தீயில் நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
- இது ஆறியதும் நன்கு விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.
- கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கத்தரிக்காய்களை உடையாமல் வதக்கி எடுக்கவும்.
- அதே கடாயில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, சிறிது பெருங்காயம் சேர்க்கவும்.
- இதில் கத்தரிக்காய்களை சேர்த்து புளித்தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
எங்கள் கொங்கு பகுதியில் உப்புப்பருப்பு, சாதம், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு combination மிகவும் பிரபலம்.
Sunday, June 14, 2009
காளான் குழம்பு (Mushroom kuzhambu)
காளான் - 1/4 கிலோ
செய்முறை
- காளானை கழுவி நறுக்கி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வதக்கி எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, சோம்பு, கசகசா, பட்டை சேர்த்து சிறு தீயில் நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
- பின்பு அதில் தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
- இது ஆறியதும் நன்கு விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.
- அரைத்த விழுதுடன் காளான் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை விடவும்.
- பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து விட்டு அத்துடன் குக்கரில் உள்ள குழம்பு கலவையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
இது கொங்கு நாட்டு கோழி குழம்பு செய்முறை. நான் கோழிக்கு பதிலாக காளான் சேர்த்துள்ளேன்.
Saturday, March 14, 2009
தக்காளி குழம்பு
- கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வறுத்து எடுக்கவும்.
- பிறகு அதே எண்ணெயில் 3/4 வெங்காயம், பட்டை, சோம்பு, கசகசா, சீரகம், மிளகு, பாதி கறிவேப்பிலை சேர்த்து சிறு தீயில் வறுக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் மல்லித்தூள், தேங்காய் சேர்த்து வறுத்து தனியே எடுக்கவும்.
- அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 11/2 தக்காளியை வதக்கி எடுக்கவும்.
- அனைத்தையும் ஆற விட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.
- கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்தவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இட்லி, தோசை அல்லது சாதத்துடனும் சாப்பிடலாம்.
Sunday, July 27, 2008
பாசிப்பயறு கடைசல்
தேவையானவை
- பாசிப்பயறை நன்றாக வேகவைக்கவும் (குக்கரை விட சட்டியில் வைத்து வேகவைத்தால் நல்லா இருக்கும்)
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கொத்தமல்லி, சீரகம் தாளித்து வெங்காயம், பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வேகவைத்த பயறையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- பிறகு பருப்பு கடையும் மத்தில் கடையவும்.
- கடைசியில் மல்லி இலை சேர்க்கவும்.
இதுவும் கொங்கு நாடு ஸ்பெசல்.
சாதத்துடன் சாப்பிடலாம்.
Sunday, July 20, 2008
கொள்ளு குழம்பு
- கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும்
- வேக வைத்த கொள்ளு, வரமிளகாய், மல்லி, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.
இது கொங்கு நாடு ஸ்பெசல் கொள்ளு குழம்பு.
Friday, July 18, 2008
கேரட் தயிர் குழம்பு
தேங்காய் - 1/2 கப்
தாளிக்க :
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
செய்முறை:
- கேரட்டை துறுவி வைக்கவும்
- அரைக்க வேண்டியவற்றை விழுதாக அரைக்கவும்
- அரைத்த விழுது, தயிர், கேரட் மற்றும் உப்பு கலந்து வைக்கவும்
- தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து , கலந்து வைத்த குழம்பில் கலக்கவும்.
ஈசி் தயிர் குழம்பு ரெடி.
சாதம், பருப்பு உடன் கலந்து சாப்பிடலாம்.
கேரட் தவிர பீட்ரூட் அல்லது வேகவைத்த பூசணி சேர்க்கலாம்.
Tuesday, July 8, 2008
அரைச்சு விட்ட சாம்பார்
பெரிய வெங்காயம் - 1 அல்லது சிறிய வெங்காயம் - 15
தக்காளி - 1 நறுக்கி வைக்கவும்
புளிக்கரைசல் , வெல்லம்
தாளிக்க :
கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, நெய் (optional)
- கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- காய் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் , உப்பு மற்றும் அரைத்த மசாலாவில் பாதி சேர்த்து வேக விடவும்.
- காய் நன்கு வெந்ததும், வேக வைத்த பருப்பு, புளிக்கரைசல், மீதி உள்ள மசாலா சேர்த்து கொதிக்க விடவும்.
- பிறகு சிறிது வெல்லம் சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.
- தாளிக்கும் கரண்டியில் நெய் சேர்த்து கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து சாம்பார் உடன் சேர்க்கவும்.
கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
இட்லி, தோசை மற்றும் பொங்கல் உடன் சேர்த்து சாப்பிடலாம்
