Monday, June 21, 2010

கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி

தேவையானவை


கத்தரிக்காய் - 3
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1/2
தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கடுகு
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு
உப்பு
எண்ணெய்

செய்முறை

  • வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
  • தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சிறு தீயில் நன்கு வேக விட்டு, தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

9 பேர் ருசி பாத்துட்டாங்க:

எல் கே said...

different combo let me try

Mahi said...

அட,சேம் பின்ச்!:) நான் தக்காளி சேர்த்ததில்லை.

Chitra said...

One of my friends, from Andhra - cooked this dish for me.... Awesome! Thank you for the recipe!

அன்புடன் மலிக்கா said...

சுகந்தி கறி சூப்பர்..

நானும் இடையில் இதுபோன்ற வேறுவேறு காய்கறிகளை சேர்த்து கறி வைப்பதுண்டு..

Admin said...

அம்மாவிடம் சமைக்க சொல்லி சாப்பிட்டால் சரி...

Menaga Sathia said...

2ஐயும் தனித்தனியாக தான் செய்திருக்கேன்.சேர்த்து செய்வது நன்றாக இருக்கும்.செய்து பார்க்கிறேன் சுகந்தி...நன்றி!!

தெய்வசுகந்தி said...

நன்றி கார்த்திக்!!!

ஆமா மகி சேம் பின்ச்!!!!

சித்ரா, கோயமுத்தூர் பக்கம் இது எல்லா வீட்டிலயும் செய்வாங்க!!!

நன்றி மலிக்கா!!!

சந்ரு, நீங்களே செய்யலாம் அவ்வளவு ஈசி!!!!

நன்றி மேனகா!!!

ப.கந்தசாமி said...

எனக்கு மிகவும் பிடித்த கறி.

தெய்வசுகந்தி said...

நன்றிங்க அய்யா!! எனக்கும் பிடித்த கறி இது.

Related Posts with Thumbnails