Monday, September 22, 2008

கொண்டைக்கடலை குருமா

தேவையானவை

கொண்டைக்கடலை - 1 கப்
உருளைக்கிழங்கு - 1 (optional) (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
உப்பு
எண்ணெய்

வறுத்து பொடிக்க:

கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 4 அல்லது 5 சிறிய துண்டுகள்
கிராம்பு - 2
பாதாம் - 4
முந்திரி - 10

எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்.

செய்முறை

  • கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வைத்து 3 விசில் விட்டு எடுக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, நன்கு வதங்கியதும், உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

  • சிறிது தண்ணீர் விட்டு உருளைகிழங்கை வேக விடவும்.

  • பிறகு கொண்டைக்கடலை சேர்த்து, அரைத்த பொடி , மிளகாய்த்தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.


  • மல்லித்தளை சேர்த்து எடுத்து வைக்கவும்.




பூரி, சப்பாத்தி அல்லது தோசையுடன் சப்பிடலாம்.

Saturday, September 6, 2008

காரக்கொழுக்கட்டை

தேவையானவை


அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5-6 ( பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (துறுவியது) (optional)
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன் (optional)
உப்பு
கறிவேப்பிலை
கடுகு
சீரகம்
எண்ணெய்



செய்முறை

  • அரிசியை 4 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து கொறகொறப்பாக அரைத்து எடுக்கவும்.


  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.


  • அதில் கேரட் மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கவும்.


  • பிறகு அரைத்த மாவை சேர்த்து, கையில் பிடிக்கும் பதம் வரும் வரையில் நன்கு கிளறவும்.


  • மாவு நன்கு ஆறிய பிறகு, கொழுக்கட்டையாக பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக விடவும்.



தேங்காய் சட்னி அல்லது ஊறுகாய் இதற்கு நல்ல மேட்ச்

Thursday, September 4, 2008

விநாயகர் சதுர்த்தியும் விடை தெரியாத கேள்வியும்



நேத்து விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை, சுண்டல் செஞ்சு சாமி கும்பிடப்போறப்போ என் பையன் ( 4 1/2 வயசு) கேட்டது.


பிரணவ் - அம்மா காலையிலேயே நான் குரு பிரம்மா எல்லாம் சொல்லி சாமி கும்பிட்டாச்சே. இப்ப என்ன special


நான் - இன்னிக்கு விநாயகர் சதுர்த்தி.


பிரணவ் -அப்படீன்னா என்ன?


நான் - வினாயகருக்கு இன்னிக்கு birthday


பிரணவ் -அப்ப கேக் கட் பண்ண போறோமா?


நான் - உனக்கு கேக் பிடிக்கிற மாதிரி விநாயகருக்கு கொழுக்கட்டை பிடிக்கும். அதனால கேக் கிடையாது.


happy birthday vinayakar பாடி முடிச்சாச்சு. அப்புறம்


பிரணவ் - அம்மா how old is vinayakar???


நான் - !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. அவன் கேக்கிற கேள்விக்கு ஒரளவுக்காவது புரியற மாதிரி பதில் சொல்லியாகனும். இல்லேன்னா விட மாட்டான். திருப்பி திருப்பி கேட்டுட்டே இருப்பான். அம்மா யாராவதுகிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்.

யாராவது அவனுக்கு புரியற மாதிரி எப்படி சொல்றதுன்னு சொல்லுங்களேன்.

Related Posts with Thumbnails