தேவையானவை
காளிஃப்ளவர் - 1 (சிறிய பூக்களாக நறுக்கவும்)
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)(optional)
கறிவேப்பிலை
கடுகு
உப்பு
எண்ணெய்
அரைக்க
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் - 10
வறுகடலை - 1 டேபிள்ஸ்பூன்
வறுகடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கசகசா - 1 டீஸ்பூன்
(நன்கு அரைத்துக்கொள்ளவும்)
செய்முறை
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கி, காளிஃப்ளவரை சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- காளிஃப்ளவர் வெந்ததும், அரைத்த விழுதை சேர்த்து 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
இட்லி, சப்பாத்தி, தோசை மற்றும் உப்புமாவுக்கும் நல்ல combination. இது வெள்ளைக் குருமான்னும் சொல்லுவாங்க. காய் எதுவும் இல்லேன்னா கூட வெறும் வெங்காயம் தக்காளில செஞ்சாலும் நல்லா இருக்கும்.
