Tuesday, July 29, 2008

ஸ்டஃப்டு கத்தரிக்காய்

தேவையானவை:
கத்திரிக்காய் - 15 ( சிறியது)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்



நிலக்கடலை - 1/4 கப் ( வறுத்து பொடித்தது)
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மாசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு



செய்முறை

  • ஒவனை 300 டிகிரி சூடு படுத்தவும்.

  • கத்திரிக்காயை ஸ்டஃப் பண்ண வசதியாக நறுக்கவும் . (காம்பு பகுதியை விட்டு மத்த பகுதியை பாதி வரை நறுக்கவும்)

  • பொடிகளை ஒன்றாக கலந்து முடிந்தவரை கத்திரிக்காயில் திணிக்கவும்.

  • ஒரு கடாயில் எண்ணய் விட்டு கத்திரிக்காய் சேர்த்து உடைந்து விடாமல் மெதுவாக திருப்பவும்.(காயின் எல்லா பக்கமும் எண்ணெய் படுமாறு திருப்ப வேண்டும்)

  • பிறகு ஒவனில் வைத்து விடவும்.

  • 20-30 நிமிடங்களில் கத்திரிக்காய் வெந்து விடும்.

ஒவனில் வைக்கும் போது அலுமினியம் ஃபாயிலில் மூடி வைத்தால் வறண்டு விடாமல் இருக்கும்.

இந்த முறையில் செய்தால் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.

நிலக்கடலையை நன்றாக பொடிக்க கூடாது.


Sunday, July 27, 2008

தக்காளி சாதம் OR பிரியாணி



தேவையானவை
பாஸ்மதி அரிசி - 3 கப்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு
இஞ்சி, பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன்
தக்காளி paste - 2 டேபிள்ஸ்பூன்
(தக்காளியும் உபயோகிக்கலாம், pasteல் கலர் நல்லா இருக்கும் )
வெங்காயம் - 2 நீளமாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
மல்லி இலை
புதினா இலை
சோயா உருண்டைகள் - 30 ( சுடு நீரில் போட்டு பிழிந்து எடுக்கவும்)

பொடிக்க
பட்டை - 5 (1 இன்ச் அளவு)
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
(மிக்ஸியில் போட்டு பொடி பண்ணவும்)

தாளிக்க

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்(optional )

கடுகு

பிரியாணி இலை

கடல் பாசி

மராட்டி மொக்கு





செய்முறை

நான் பாத்திரத்தில் செய்து ovenல் வைப்பேன். வேண்டுமானால் குக்கரில் வைக்கலாம்.

குக்கரில் வைப்பதாக இருந்தால் அதிலேயே தாளித்து விடலாம். ovenல் வைப்பதாக இருந்தால் oven safe பாத்திரத்தில் தாளித்து விடலாம்.


  • அரிசியை ஊற வைக்கவும். ovenஐ 350F ல் செட் செய்யவும்.

  • பாத்திரத்தில் எண்ணெய்+நெய் விட்டு கடுகு,பிரியாணி இலை, கடல் பாசி, மராட்டி மொக்கு, பொடி, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
  • பிறகு சோயா உருண்டைகள், தக்காளி பேஸ்ட், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • அதில் 5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • ஒரள்வு அரிசி வெந்தவுடன், மல்லி இலை, புதினா இலை சேர்த்து கிளறி, பாத்திரத்தை எடுத்து ovenல் வைத்து 20-30 நிமிடங்கள் கழித்து வெளியே எடுக்கவும்.
இதில் சோயா உருண்டைகள் சேர்க்காமலும் செய்யலாம். என் பையனுக்கும், பொண்ணுக்கும் சோயா உருண்டைகள் பிடிக்கும். அதனால் எல்லா மசாலா சமையலிலும் சேர்த்து விடுவேன்.

மல்லி, புதினா கடைசியில் சேர்ப்பதால் நல்ல மணம் இருக்கும்.




பாசிப்பயறு கடைசல்

தேவையானவை

பாசிப்பயறு(முழுப்பயறு) - 1 கப்
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 10 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
பூண்டு - 2 பல் நறுக்கியது
கொத்தமல்லி - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய்


செய்முறை


  • பாசிப்பயறை நன்றாக வேகவைக்கவும் (குக்கரை விட சட்டியில் வைத்து வேகவைத்தால் நல்லா இருக்கும்)


  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கொத்தமல்லி, சீரகம் தாளித்து வெங்காயம், பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வேகவைத்த பயறையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.


  • பிறகு பருப்பு கடையும் மத்தில் கடையவும்.
  • கடைசியில் மல்லி இலை சேர்க்கவும்.

இதுவும் கொங்கு நாடு ஸ்பெசல்.

சாதத்துடன் சாப்பிடலாம்.

Sunday, July 20, 2008

கொள்ளு குழம்பு

தேவையானவை
கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு



செய்முறை

  • கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும்

  • வேக வைத்த கொள்ளு, வரமிளகாய், மல்லி, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

  • அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.



இது கொங்கு நாடு ஸ்பெசல் கொள்ளு குழம்பு.













Friday, July 18, 2008

கேரட் தயிர் குழம்பு



தேவையானவை:





தயிர் - 1 கப்

கேரட் 1/2 கப்

அரைக்க :
தேங்காய் - 1/2 கப்

சீரகம் - 1 டீ ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

தாளிக்க :

எண்ணெய்

கடுகு

கறிவேப்பிலை

செய்முறை:



  • கேரட்டை துறுவி வைக்கவும்


  • அரைக்க வேண்டியவற்றை விழுதாக அரைக்கவும்


  • அரைத்த விழுது, தயிர், கேரட் மற்றும் உப்பு கலந்து வைக்கவும்


  • தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து , கலந்து வைத்த குழம்பில் கலக்கவும்.


ஈசி் தயிர் குழம்பு ரெடி.

சாதம், பருப்பு உடன் கலந்து சாப்பிடலாம்.

கேரட் தவிர பீட்ரூட் அல்லது வேகவைத்த பூசணி சேர்க்கலாம்.















Tuesday, July 8, 2008

அரைச்சு விட்ட சாம்பார்

வேக வைக்க
துவரம் பருப்பு - 1 கப்

வறுத்து அரைக்க
வர மிளகாய் - 8
மல்லி - 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 1 மேசைக்கரண்டி(optional)
நன்கு வறுத்து சிறிது நீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.

மற்றவை :
காய் : முருங்கை, வெள்ளைப்பூசணி, கேரட் (அல்லது விருப்பம்போல்)
ஒரே அளவாக நறுக்கி வைக்கவும்.

பெரிய வெங்காயம் - 1 அல்லது சிறிய வெங்காயம் - 15

தக்காளி - 1 நறுக்கி வைக்கவும்


புளிக்கரைசல் , வெல்லம்

தாளிக்க :

கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, நெய் (optional)

  • கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

  • காய் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் , உப்பு மற்றும் அரைத்த மசாலாவில் பாதி சேர்த்து வேக விடவும்.

  • காய் நன்கு வெந்ததும், வேக வைத்த பருப்பு, புளிக்கரைசல், மீதி உள்ள மசாலா சேர்த்து கொதிக்க விடவும்.

  • பிறகு சிறிது வெல்லம் சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.

  • தாளிக்கும் கரண்டியில் நெய் சேர்த்து கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து சாம்பார் உடன் சேர்க்கவும்.

கொத்தமல்லி இலை சேர்க்கவும்.



இட்லி, தோசை மற்றும் பொங்கல் உடன் சேர்த்து சாப்பிடலாம்



Sunday, July 6, 2008

அவல் பாயசம்

முதல் தடவையா வீட்டுக்கு வரவங்களுக்கு இனிப்பு கொடுக்கனும்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க. அதனால முதல்ல அவல் பாயசம்.



முதல்ல தேவையானதெல்லாம் எடுத்துக்கனும்





அவல் - 1 கப்

சர்க்கரை - 1 1/2 கப்

பால் - 1 கப்

நெய்

முந்திரி

திராட்சை





அரைக்க : தேங்காய் , ஏலக்காய்








  • முந்திரி & திராட்சையை நெய் விட்டு நல்லா வறுத்து எடுத்து தனியா வைக்கனும்

  • இன்னும் கொஞ்சம் நெய் விட்டு அவலை சிவக்க வறுக்கனும்.

  • பிறகு பால் சேர்த்து வேக வைக்கனும்.( தண்ணீர் வேண்டுமானால் சேர்க்கலாம்.

  • நன்றாக வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கரைந்தவுடன், அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி வறுத்த முந்திரி & திராட்சை சேர்க்க வேண்டும்.


பாயசம் கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் பால் சேர்க்கலாம்.




Related Posts with Thumbnails