Tuesday, May 11, 2010

பாசிப்பருப்பு செளசெள கூட்டு

தேவையானவை


பாசிப்பருப்பு - 1/2 கப்
செளசெள - 1
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு

அரைக்க
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை

  • பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து மலர வேகவிடவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து , வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அதில் நறுக்கிய காய் சேர்த்து வதக்கவும்.
  • காய் நன்கு வதங்கியதும் அதில் பருப்பு, மற்றும் அரைத்தவற்றையும் சேர்த்து கொதிக்க விடவும்.

சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

Monday, May 3, 2010

காய்கறி பக்கோடா

தேவையானவை
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
பூண்டு - 3 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய்

காளிஃப்ளவர்
குட மிளகாய்
புரோக்கலி
வெங்காயம்
மல்லித்தளை
வெந்தயக்கீரை
செய்முறை
  • காய்களை உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  • பூண்டு, சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
  • காய்களுடன் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் அரைத்து வைத்ததையும் சேர்த்து பிசறி வைக்கவும்.

  • எண்ணெயை காய வைத்து, சிறிது சிறிதாக போட்டு நன்கு வேக விட்டு எடுக்கவும்.

எல்லா காய்களும், கீரையும் சேர்க்கலாம்.

Related Posts with Thumbnails