Wednesday, June 23, 2010

மாங்காய் ஊறுகாய் - II

இது என் ஆந்திரா தோழி ஒருவருடைய ரெசிபி!.

தேவையானவை
மாங்காய் (பெரியது)- 2
உப்பு - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 1/2 கப்
கடுகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 10 பல்
நல்லெண்ணெய் - 3கப்.

செய்முறை

  • மாங்காயை துண்டுகளாக நறுக்கவும். (மாங்காய் கொட்டையின் மேல் உள்ள கடினமான பகுதியும் சேர்ந்து வருமாறு நறுக்கவும்)
  • இஞ்சி மற்றும் பூண்டை அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.(நான் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து அரைத்தேன்)
  • எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • கடாயி எண்ணெயை சூடாக்கி , பிறகு ஆற வைத்து சேர்க்கவும்.
  • ஒரு வாரம் ஊறிய பிறகு உபயோகிக்கலாம்.

இஞ்சி பூண்டு சேர்ப்பதால் நல்ல வாசனையாக இருக்கும்.

கொள்ளு ரசம்

தேவையானவை

கொள்ளு வேகவைத்த தண்ணீர் - 3 கப்
சின்ன வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
புளிக்கரைசல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
மல்லித்தளை
பூண்டு - 3 பல் (நன்றாக தட்டி வைக்கவும்)(crushed)
கடுகு

பொடிக்க
சீரகம் - 1டேபிள்ஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 4
(நன்கு பொடிக்கவும்) அம்மியில் பொடித்தால் நல்லா இருக்கும். நான் சின்ன கல்லில் பொடிப்பேன். மிக்ஸியும் உபயோகிக்கலாம்.


செய்முறை

  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதில் புளிக்கரைசல் மற்றும் ரசப்பொடி , உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • பிறகு கொள்ளு வேக வைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
  • கடைசியாக மல்லித்தளை சேர்க்கவும்.
இதை சூப் போல அப்படியே குடிக்கலாம். சாதத்துடன் சாப்பிடலாம்.

தட்டைபயறு, பாசிப்பயறு வேக வைத்த தண்ணீரிலும் இதே போல் ரசம் செய்யலாம்.

கொள்ளு பொடி

இது கொங்கு நாடு ஸ்பெசல் கொள்ளுப்பொடி.

தேவையானவை

கொள்ளு - 1 கப்
சின்ன வெங்காயம் - 6 -8 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4(நறுக்கியது)
கறிவேப்பிலை
பூண்டு - 1 பல்லு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
உப்பு

செய்முறை

  • கொள்ளை சுத்தம் செய்து 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 6 விசில் விடவும்.
  • பிறகு தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு (ரசத்துக்கு உபயோகிக்கலாம்) கொள்ளை உலர விடவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு மல்லி, சீரகம் தாளித்து சின்ன வெங்காயத்தில் பாதியையும், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுக்கவும்.
  • வதக்கி எடுத்தவற்றுடன் உலர வைத்த கொள்ளு மற்றும் மீதி உள்ள சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும்.

சாதம் மற்றும் நெய்யுடன் சாப்பிட அருமையாக இருக்கும். பச்சை வெங்காயம் சேர்ப்பதால் நல்ல ருசியாக இருக்கும். நான் அதிக நேரம் உலர வைக்காம செஞ்சுட்டேன் இல்லேன்னா இன்னும் உதிரியாக வரும்.

என் சிறுவயதில் கொள்ளுப்பொடி செய்யும் போது மிக்ஸியில் அரைக்க மாட்டாங்க. உரலில் இடித்து எடுப்பாங்க. இப்ப நிறைய பேருக்கு உரல் எப்படி இருக்கும்னே தெரியாது.

ஒரு சின்ன சோகம் இதுல, கொள்ளு US ல கிடைக்கறதில்ல. இனி இந்தியா போயிட்டு வரப்ப இதையும் கொண்டு வரணும்.

Monday, June 21, 2010

கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி

தேவையானவை


கத்தரிக்காய் - 3
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1/2
தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கடுகு
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு
உப்பு
எண்ணெய்

செய்முறை

  • வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
  • தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சிறு தீயில் நன்கு வேக விட்டு, தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

Saturday, June 19, 2010

முட்டை டோஸ்ட்(Spicy French Toast)

தேவையானவை

ரொட்டி துண்டுகள் - 4
முட்டை - 2
வெங்காயம் - 1/4 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது( பொடியாக நறுக்கியது)
மல்லித்தளை - ஒரு கைப்பிடி(பொடியாக நறுக்கியது)
உப்பு
மிளகுத்தூள்

செய்முறை
  • முட்டையை உடைத்து நன்கு அடித்து வைக்கவும்.
  • வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை,மல்லித்தளை, உப்பு, மிளகுத்தூள் அனைத்தையும் சேர்த்து ஒரு அகலமான பாத்திரத்தில் கலக்கவும்.

  • நான் ஸ்டிக் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
  • ரொட்டியை, முட்டை கலவையில் முக்கி எடுத்து வெங்காயம் கலவை இரு புறமும் படியுமாறு, எடுத்து தோசைக்கல்லில் போடவும்.
  • சிறு தீயில்2 நிமிடம் வேக விட்டு திருப்பி போட்டு மறுபடியும் 2 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.

காலைஉணவுக்கு ஏற்ற சத்தான ஈசியான உணவு.

Thursday, June 17, 2010

டொமாட்டிலோ(Tomatillo/ Husk tomato) பருப்பு

டொமாட்டிலோ அல்லது ஹஸ்க் டொமாட்டோ, பார்ப்பதற்க்கு பச்சை தக்காளி போலவே இருக்கும், ஆனால் அதன் மேல் ஒரு லேயர் இருக்கும். இது தென் அமெரிக்க சமையலில் நிறைய உபயோகப்படுத்தப்படும். புளிப்பு சுவையுடன் இருக்கும். இதில பருப்பு மாதிரி ட்ரை பண்ணினேன். மாங்காய் போட்ட சாம்பார் மாதிரி நல்லாவே இருந்தது.
தேவையானவை

துவரம் பருப்பு - 1/2 கப்
டொமாட்டிலோ - 3
வெங்காயம் - 1/2
கறிவேப்பிலை
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
  • கொதித்தவுடன் அதில் பருப்பு சேர்த்து வேக விடவும்.
  • டொமாட்டிலோவின் மேல் லேயரை எடுத்து விட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • பருப்பு முக்கால் பதம் வெந்ததும் மிளகாய்த்தூள், உப்பு மற்றும் டொமாட்டிலோவை சேர்த்து வேக விடவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வைக்கவும்.
  • பருப்பும் டொமாட்டிலோவும் நன்கு வெந்ததும் அதில் கடாயில் உள்ளவற்றை சேர்த்து ஒரு கொதி விடவும்.
  • பிறகு அதை எடுத்து கடைந்து வைக்கவும்.

சாதத்துடன் சாப்பிட நன்றாக இருந்தது.

Wednesday, June 16, 2010

பிரவுன் அவல் உப்புமா (Brown poha uppuma)


தேவையானவை
பிரவுன் அவல்(மட்டை அரிசி அவல்) - 1 கப்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கிய
து)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
இஞ்சி - 1 சிறுதுண்டு(பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (நான் அவசரத்துல போட மறந்துட்டேன்)
கறிவேப்பிலை - சிறிது

தாளிக்க
கடுகு
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு
உப்பு
எண்ணெய்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் அவல் எடுத்து, அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.(15 நிமிடங்கள்)
  • அது ஊறும் நேரத்தில் வெங்காயம், மிளகாய், தக்காளி நறுக்கி வைக்கலாம்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அது வதங்கும் நேரத்தில் அவலை தண்ணீர் போக நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  • கடாயில் அவல் சேர்த்து நன்கு சூடாகும் வரை கலக்கவும்.

20 நிமிசத்துல செஞ்சரலாம். காலை நேர உணவுக்கு சீக்கிரமாகவும், சத்தாணதாகவும் சாப்பிடலாம். இதில் குட

மிளகாயும் சேர்க்கலாம்.


Sending this to Healthy recipe Hunt @ kurinjikathambam

பீட்ரூட் இலை சாம்பார்

பீட்ரூட் இலையில் அதிக ஆளவு இரும்புச்சத்து உள்ளது. அத்துடன் calcium, magnesium, copper, phosphorus, sodium ஆகியவையும் உள்ளது.

(Thanks to google)
தேவையானவை:

துவரம் பருப்பு - 1 கப்
பீட்ரூட் இலை - 1 கட்டு
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 1/2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு

தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது

செய்முறை
  • பூண்டு சேர்த்து பருப்பை வேகவைக்கவும். குக்கரில் வைக்காமல், பாத்திரத்தில் வைத்து வேக வைத்தால் பருப்பு கரையாமல் இருக்கும்.
  • பீட்ரூட் இலையை பொடியாக நறுக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • அதில் பீட்ரூட் இலை, மிளகாய்த்தூள், சாம்பார்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  • அதில் வேக வைத்த பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

Tuesday, June 15, 2010

பிரவுன் அரிசி, பிரவுன் அவல் தோசை & கார சட்னி

தேவையானவை
பிரவுன் அரிசி(brown long grain rice) - 4 கப்
உளுந்து - 1/4 கப்
பிரவுன் அவல் - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு

செய்முறை
  • அரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அவலை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுத்து உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும்.
  • தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.

தோசை ஸ்பான்ஞ் மாதிரி மிருதுவாக இருக்கும்.கார சட்னியுடன் சாப்பிட நல்லா இருக்கும். இதில் அவல் சேர்க்காமல் செய்தால் நல்ல க்ரிஸ்பியாக வரும்.

ஈசி கார சட்னி

வெங்காயம் - 1

தக்காளி - 1

மல்லித்தளை - 1/4 கட்டு

வரமிளகாய் - 2

சீரகம் - 1/2 டீஸ்பூன்

புளி சிறிது

உப்பு

அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுத்து, சிறிது நல்லெண்ணெய் தாளித்து கொட்டவும்.

Friday, June 11, 2010

ஸ்ட்ராபெர்ரி/பாதாம்/வாழைப்பழ ஸ்மூத்தி(strawberry/ almond/ Banana Smoothie)

தேவையானவை

ஸ்ட்ராபெர்ரி - 10
வாழைப்பழம் - 1
சோயா பால் - 1 கப்
தேன் - 1 டேபிள்ஸ்பூன்
பாதாம் - 4

செய்முறை

  • மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி, ஊற வைத்த பாதாம் மற்றும் வாழைப்பழம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • அதில் சோயாபால் மற்றும் தேன் சேர்த்து அரைக்கவும்.
  • healthy smoothie is ready.

Saturday, June 5, 2010

புதுமனை புகுவிழா

ஒரு மாசமா ப்ளாக் பக்கம் வர முடியாத அளவுக்கு வேலை. அன்பா விசாரிச்சவங்களுக்கு ரொம்ப நன்றி!!!.


இப்படி ஆரம்பிச்சதுதான்.

இது ஒருவாரத்திற்கு அப்புறம்


இது ஒரு மாசத்துக்கு அப்புறம்.


மூணு மாசத்துல இப்படி கட்டி முடிச்சுட்டாங்க.

பூஜை வெள்ளிக்கிழமை நல்ல படியா நடந்தது.

இது நம்ம சமையல் சாம்ராஜ்யம்!!!!!! பால் பொங்கியாச்சு. அடுத்த வாரம் புது வீட்டுக்கு போயிருவோம். அதுக்கப்பறம் பதிவுகள் தொடரும்.

Related Posts with Thumbnails