Tuesday, August 26, 2008

மரவள்ளிக்கிழங்கு தோசை

தேவையானவை

பச்சரிசி - 11/2 கப்
புழுங்கலரிசி - 11/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
(மூன்றையும் ஒன்றாக 6-8 மணி நேரம் ஊற வைக்கவும் )


மரவள்ளிக்கிழங்கு - 1 (மீடியம் சைஸ் )
வர மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
உப்பு



செய்முறை

  • கிழங்கை தோல் நீக்கி சின்ன துண்டுகளாக நறுக்கவும்.

  • ஊற வைத்த அரிசி ,கிழங்கு, மிளகாய், சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.


  • இதை உடனே தோசை செய்யலாம். புளிக்க வைக்க தேவையில்லை.




தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம்.

Sunday, August 24, 2008

தக்காளி சந்தகை(இடியாப்பம், சேவை)





எங்க ஊர்ப்பக்கம் இதை சந்தகைன்னுதான் சொல்லுவாங்க. ஆனா மத்த பக்கம் இடியாப்பம் அல்லது சேவைன்னும் சொல்லறாங்க. அதே மாதிரி செய்முறையும் மாறும். சந்தகை செய்யறதுக்கு நிறைய வேலை செய்யனும்கிறதால, இப்ப frozen இடியாப்பம் வாங்கிக்கறது.

தேவையானவை
frozen இடியாப்பம் - 1 பாக்கெட்
வெங்காயம் - 1 கப் (நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 8
தக்காளி - 1 (நறுக்கியது)
தக்காளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்(அல்லது இன்னும் 1 தக்காளி)
கறிவேப்பிலை
கடுகு
எண்ணெய்
இஞ்சி பூண்டு அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன்

பொடிக்க
சோம்பு - 2 டீஸ்பூன்
பட்டை - 5 (1 இன்ச் அளவு)
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கசகசா - 1 டீஸ்பூன்

செய்முறை

  • இடியாப்பத்தை microwave ல் சூடு பண்ணிக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பொடி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி, தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  • அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • பிறகு இடியாப்பம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.



தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Thursday, August 21, 2008

முளைப்பயிறு ஸ்பிரிங் ரோல்

தேவையானவை

எண்ணெய்
ஸ்பிரிங் ரோல் பேஸ்ட்ரி(Sheets)
மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்

For Stuffing
பெரிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
முளைப்பயிறு(பாசிப்பயறு) - 1/4 கப் (நறுக்கியது)
கோஸ், 1/4 கப் (நறுக்கியது)
கேப்சிகம்(பச்சை & சிவப்பு) - 1/4 கப்(நறுக்கியது)
பூண்டு - 1 பல் (பொடியாக நறுக்கியது)
சில்லி சோய் சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு
மிளகாய்த்தூள் - தேவையான அளவு


செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • பிறகு வெங்காயம், முளைப்பயிறு மற்றும் காய்கள் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
  • கடைசியாக சில்லி சோய் சாஸ், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  • மைதா மாவை தண்ணீரில் பேஸ்ட் மாதிரி கலந்து வைக்கவும்.
  • காய்கறிகலவை நன்கு ஆற விடவும்.

  • பிறகு பேஸ்ட்ரி ஷீடில் ஒரு டேபிள் ஸ்பூன் காய் கலவையை வைத்து ஸ்பிரிங் ரோல் மாதிரி சுற்றி அதன் முனையை மைதா பேஸ்டில் ஒட்டவும்.



  • காய்கறி கலவை முடியும் வரை செய்யவும். 10 அல்லது 12 ஸ்பிரிங் ரோல் செய்யலாம்.
  • பிறகு கடாயில் எண்ணெய் வைத்து ஒவ்வொன்றாக பொறித்து எடுக்கவும்.



Monday, August 18, 2008

தக்காளிச்சட்னி

தேவையானவை

தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
உப்பு
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை



வறுக்க
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/4 டேபிள் ஸ்பூன்
மிளகு - 4
வரமிளகாய் - 3





செய்முறை
  • வறுக்க வேண்டியதை சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும்

  • மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கவும்.

  • இவை அனைத்தையும் சேர்த்து உப்பும் சேர்த்து அரைக்கவும்.

  • பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.






இட்லி, தோசை, பணியாரம் அனைத்திற்கும் நல்ல combination இந்த சட்னி.

Wednesday, August 6, 2008

பட்டாணி புலாவ்

தேவையானவை

பாஸ்மதி அரிசி - 3 கப்
பட்டாணி - 1 கப்

அரைக்க
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 6
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 4 சிறிய துண்டு
ஏலக்காய் - 1


தாளிக்க
பிரியாணி இலை
கடல் பாசி
மராட்டி மொக்கு
சோம்பு
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
வெங்காயம் - 1 பெரியது ( நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
எண்ணெய்
நெய்


முந்திரி

செய்முறை


  • அரிசியை கழுவி ஊற வைக்கவும்.

  • ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு பிரியாணி இலை, கடல் பாசி, மராட்டி மொக்கு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து, பிறகு வெங்காயம் , பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  • அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

  • இவற்றுடன் பாஸ்மதி அரிசி, 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து rice cookerல் வைக்கவும்.

  • கடைசியாக முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
குருமாவுடன் சாப்பிடலாம்.
வேண்டுமானால் தேங்காய்ப்பால் 1 கப் சேர்க்கலாம்.

பாசிப்பருப்பு பாயசம்

தேவையானவை
பாசிப்பருப்பு - 3/4 கப்
வெல்லம் - 1/2 கப்
முந்திரி - 10
திராட்க்ஷை - 10
நெய் - 1 டேபிள் ஸ்பூன்




அரைக்க
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 4






செய்முறை
  • பாசிப்பருப்பை மலர வேகவைக்க வேண்டும்.
  • அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவும்
  • பிறகு வெல்லம் சேர்த்து, அது கரைந்தவுடன் இறக்கவும்.
  • நெய்யில் முந்திரி, திராட்க்ஷை வறுத்து பாயசத்துடன் சேர்க்கவும்.



Related Posts with Thumbnails