Sunday, February 21, 2010

சென்னா மசாலா

ஆஸ்டின் வந்ததுக்கப்பறம் பதிவு போடவே முடியல. இடம் மாறி வந்து எல்லாம் ஒழுங்கான பிறகு computer ல வைரஸ் வந்து எல்லாம் மாத்த வேண்டியதா போச்சு. நம்ம பதிவு போடறது அதுக்கு கூட புடிக்கல போல.

இப்ப ஆஸ்டின்ல இருந்து முதல் பதிவா ஒரு accidental hit recipe. அத வெறும் சமையல் குறிப்பா எழுதறதவிட, நான் எப்படி பண்ணினேன்னு சொல்றேன்.

இரவு உணவுக்கு அவகாடோ சப்பாத்தி (அது அடுத்த பதிவு) , சென்னா மசாலான்னு முடிவு பண்ணி, காலையிலயே சென்னா ஊற வெச்சாச்சு. சாயங்காலம் பையனையும் பொண்ணையும் விளையாட கூட்டிட்டு போயிட்டதால அவசரமா சமைக்க வேண்டியதா போச்சு. அதனால எல்லாத்தையும் முன்னாலயே எடுத்து வைக்க முடியல.



சென்னாவை குக்கர்ல வச்சு 4 விசில் விட்டு எடுத்தேன். அடுத்து கடாஅயை அடுப்புல வச்சு, அது சூடாகறதுக்குள்ளே 1 வெங்காயம், 1 தக்காளி பொடியாக நறுக்கிட்டேன். கடாயில எண்ணெய் விட்டு சீரகம் தாளிச்சு விட்டு, வெங்காயம் வதக்கி, தக்காளியும் சேர்த்து வதக்கினப்புறம்தான் இஞ்சி, பூண்டு அரைக்கலயேன்னு நெனச்சேன். 4 பல் பூண்டு, 1 துண்டு இஞ்சி எடுத்து துருவி அப்படியே கடாயில சேர்த்துட்டேன்.


அது வதங்கினப்பூறம் பார்த்தா தக்காளி கம்மியா இருக்கற மாதிரி தோணிச்சு. 1 1/2 டேபிள்ஸ்பூன் தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கினேன்.


அதுல மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து, வேகவைத்த சென்னாவையும் சேர்த்து திருப்பியும் குக்கர்ல வச்சாச்சு.


அப்பாடா ஒரு வேலை முடிஞ்சதுன்னு சப்பாத்தி போட ஆரம்பிச்சாச்சு. 2 விசில் வரைக்கும் விட்டு குக்கரை எடுத்து பார்த்தா, அது ஒரே தண்ணியா இருந்தது. அவசரத்துல தண்ணி கொஞ்சம் அதிகமா ஊத்திட்டேன் போல.


அடுத்ததா அதை சரி பண்ண, 4 பாதாம் 4 முந்திரி அரைச்சு சேத்து, நல்லா தண்ணி வத்தற வரைக்கும் விட்டேன். கடைசியா மல்லித்தளை கொஞ்சம் நறுக்கி சேர்த்தேன்.



இவ்வளவும் சொல்லிட்டு கோவிந்தோட கமெண்ட் சொல்லலன்ன்னா நல்லா இருக்காது. "எப்படி இன்னிக்கு இவ்வளவு சூப்பரா இருக்கு சென்னா மசாலா?".


உங்களுக்காகவே கஷ்டப்பட்டு செஞ்சேன்னு சொல்ல எனக்கும் ஆசைதான். ஆனாலும் உண்மைய சொல்லிட்டேன் (இல்லேனாலும் இந்த 8 வருசத்துல நம்மள பத்தி தெரியாதா அவருக்கு).

Related Posts with Thumbnails