Showing posts with label பிரியாணி. Show all posts
Showing posts with label பிரியாணி. Show all posts

Wednesday, April 28, 2010

புதினா துவரை புலாவ்

தேவையானவை

பாஸ்மதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நீள்வாக்கில் நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
துவரை - 1 கப் (frozen thuvar lilva)
பிரியாணி இலை - சிறிது
ஏலக்காய் - 1
முந்திரி - சிறிது
தேங்காய்ப்பால் - 1 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்


அரைக்க
புதினா - 1 கட்டு
மல்லி - 1/2 கட்டு
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 8
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.


செய்முறை
  • குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்து பிரியாணி இலை, ஏலக்காய், முந்திரி சேர்த்து வதக்கவும்.
  • அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
  • முந்திரி சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் துவரை சேர்த்து வதக்கி, அரைத்தவற்றை சேர்த்து, உப்பும் சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
  • அதில் அரிசி சேர்த்து வதக்கி, தேங்காய்ப்பால் மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி போடவும்.
  • 2 விசில் விட்டு இறக்கவும்.

துவரைக்கு பதிலாக, frozen soya bean, அல்லது ஏதாவது ஒரு frozen beans பயன்படுத்தலாம்.

Sunday, March 28, 2010

முளைகட்டிய கடலை புலாவ்

தேவையானவை


பாஸ்மதி அரிசி - 3 கப்
முளைக்கட்டிய கொண்டைக்கடலை - 11/2 கப்

அரைக்க

இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 6 பல்
சின்ன வெங்காயம் - 2
முந்திரி - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 3 சிறிய துண்டுகள்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கசகசா - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க

பிரியாணி இலை - சிறிது
கடல்பாசி - சிறிது
ரோஜா மொக்கு - சிறிது
மராட்டி மொக்கு - சிறிது
வெங்காயம் - 1 ( நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
புதினா - சிறிது
உப்பு
எண்ணெய்

செய்முறை

  • குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதில் முளை கட்டிய கடலையை சேர்த்து வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • அதில் அரிசியையும் சேர்த்து , உப்பு சேர்த்து வதக்கி 6 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் போடவும்.
  • ஒரு விசில் வந்ததும், சிறுதீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

தயிர் பச்சடியுடன் சாப்பிட நல்லா இருக்கும். முளைகட்டிய கடலையில் புரோடின் நிறைய உள்ளதால் இது healthy புலாவ்.

Monday, November 2, 2009

காளான் பிரியாணி

தேவையானவை


பாஸ்மதி அரிசி - 3 கப்
காளான் - 2 கப்
oyster mushroom - 1 கப்
(நம்ம ஊர்ல கிடைக்கிற சிப்பிக்காளான் மாதிரி இருக்கும்)
வெங்காயம் - 2 மெலிதாக நறுக்கியது
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லிதழை - சிறிது
புதினா - 1 கப்(நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்



அரைக்க

இஞ்சி - 10 சிறிய துண்டுகள்
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 4
பட்டை - 2 துண்டு
சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2
கசகசா - 1 டீஸ்பூன்
மல்லிவிதை - 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 5
(சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.)

தாளிக்க

பிரியாணி இலை - சிறிது
மராட்டி மொக்கு
கடல்பாசி
ரோஜா மொக்கு
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
ஜாதிக்காய் - சிறிது துறுவியது
ஏலக்காய் - 1
முந்திரி - சிறிது

செய்முறை
  • அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
  • குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்க்கவும்.
  • அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அரைத்த விழுதை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு என்னெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
  • காளானை சேர்த்து வதக்கவும்.
  • ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து சேர்த்து நன்கு கலக்கவும்.
  • அதில் புதினா மற்றும் மல்லிதழை சேர்த்து கலக்கவும்.
  • 4 கப் தண்ணீர் சேர்த்து உப்பு காரம் பார்த்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடிவைத்து விசில் போடவும்.

  • 1 விசில் வந்ததும் சிறு தீயில் 5 நிமிடம் விட்டு இறக்கவும்.
    தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம். எங்க வீட்ல அனைவருக்கும் பிடித்த உணவு இது. இதுல நீங்க காரம் இன்னும் கூட சேர்க்கலாம். கிராம்பு அரைக்க சேர்க்காம தாளிக்க சேர்க்கறதால அந்த காரம் குறையும். இது வெறும் oyster mushroom ல பண்ணினாலும் நல்லா இருக்கும்.

Sunday, July 27, 2008

தக்காளி சாதம் OR பிரியாணி



தேவையானவை
பாஸ்மதி அரிசி - 3 கப்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு
இஞ்சி, பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன்
தக்காளி paste - 2 டேபிள்ஸ்பூன்
(தக்காளியும் உபயோகிக்கலாம், pasteல் கலர் நல்லா இருக்கும் )
வெங்காயம் - 2 நீளமாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
மல்லி இலை
புதினா இலை
சோயா உருண்டைகள் - 30 ( சுடு நீரில் போட்டு பிழிந்து எடுக்கவும்)

பொடிக்க
பட்டை - 5 (1 இன்ச் அளவு)
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
(மிக்ஸியில் போட்டு பொடி பண்ணவும்)

தாளிக்க

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்(optional )

கடுகு

பிரியாணி இலை

கடல் பாசி

மராட்டி மொக்கு





செய்முறை

நான் பாத்திரத்தில் செய்து ovenல் வைப்பேன். வேண்டுமானால் குக்கரில் வைக்கலாம்.

குக்கரில் வைப்பதாக இருந்தால் அதிலேயே தாளித்து விடலாம். ovenல் வைப்பதாக இருந்தால் oven safe பாத்திரத்தில் தாளித்து விடலாம்.


  • அரிசியை ஊற வைக்கவும். ovenஐ 350F ல் செட் செய்யவும்.

  • பாத்திரத்தில் எண்ணெய்+நெய் விட்டு கடுகு,பிரியாணி இலை, கடல் பாசி, மராட்டி மொக்கு, பொடி, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
  • பிறகு சோயா உருண்டைகள், தக்காளி பேஸ்ட், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • அதில் 5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • ஒரள்வு அரிசி வெந்தவுடன், மல்லி இலை, புதினா இலை சேர்த்து கிளறி, பாத்திரத்தை எடுத்து ovenல் வைத்து 20-30 நிமிடங்கள் கழித்து வெளியே எடுக்கவும்.
இதில் சோயா உருண்டைகள் சேர்க்காமலும் செய்யலாம். என் பையனுக்கும், பொண்ணுக்கும் சோயா உருண்டைகள் பிடிக்கும். அதனால் எல்லா மசாலா சமையலிலும் சேர்த்து விடுவேன்.

மல்லி, புதினா கடைசியில் சேர்ப்பதால் நல்ல மணம் இருக்கும்.




Related Posts with Thumbnails