Sunday, August 30, 2009

Easy கத்தரிக்காய் சட்னி

தேவையானவை:

வெங்காயம் - 1/2
தக்காளி - 1
கத்தரிக்காய் - 5
(பொடியாக நறுக்கவும்)
வர மிளகாய் - 2
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு


செய்முறை:

  • கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வறுத்து எடுக்கவும்.

  • அதே எண்ணெயில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

  • பிறகு கத்தரிக்காயை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  • அதில் தக்காளி சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.
  • நன்றாக ஆறியதும் அரைத்து எடுத்து வைக்கவும்.

இட்லி, தோசை, பொங்கல் அனைத்துக்கும் நல்லா இருக்கும்.



கிழங்கு தோசை கத்தரிக்காய் சட்னி.

Saturday, August 29, 2009

காய்கறி அவல் உப்புமா(Vegetable poha uppuma)

தேவையானவை:

அவல் - 2 கப்
வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 சிறிய துண்டு பொடியாக நறுக்கியது
தக்காளி - 1/2
கேரட் - 1
முட்டைகோஸ் - 1/4
குடமிளகாய் பச்சை- 1/2
குடமிளகாய் ஆரஞ்ச் - 1/2
(பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
கடுகு
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

  • அவலை தண்ணீரில் நனைத்து பிழிந்து எடுக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

  • அதில் காய்கறிகளை சேர்த்து , உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.

  • பிறகு தக்காளி சேர்த்து வதக்கி , மஞ்சள்தூள் சேர்க்கவும்.

  • அதில் அவலை சேர்த்து நன்கு கலந்து சூடானதும் இறக்கவும்.

Thursday, August 27, 2009

குடமிளகாய் ஸ்டிர் ஃப்ரை(Capsicam stir fry)

தேவையானவை:



குடமிளகாய் (பச்சை) - 1/2
குடமிளகாய்(ஆரஞ்சு) -1/2
இத்தாலியன் பெப்பர் - 1
வெங்காயம் - 1
(நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்)
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு



செய்முறை:

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பட்டை, சோம்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  • நன்கு வதங்கியதும், அதில் நறுக்கி வைத்த மிளகாய்களையும், உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.

  • பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி இறக்கவும்.

சப்பாத்தியில் ரோல் பண்ணி சாப்பிடலாம்.

அல்லது தயிர் சாதத்துடன் சாப்பிடலாம்.

Sunday, August 23, 2009

ஸ்விஸ் சார்டு(Swiss chard) பருப்பு

தேவையானவை


ஸ்விஸ் சார்டு(Swiss chard) - 1 கட்டு
துவரம் பருப்பு - 1/2 கப்
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
கடுகு
எண்ணெய்




செய்முறை

  • பருப்புடன் பூண்டு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்.
  • ஸ்விஸ் சார்டை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்துவதக்கவும்.
  • அதில் ஸ்விஸ் சார்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  • பிறகு அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
சுவையான ஸ்விஸ் சார்டு(Swiss chard) பருப்பு ரெடி. சூடான சாதத்துடன் (நெய்யும்) சேர்த்து சாப்பிடலாம்

இன்று மதிய உணவு, சாதம், ஸ்விஸ் சார்டு(Swiss chard) பருப்பு மற்றும் புரோக்கலி பொறியல்.

Saturday, August 22, 2009

கோதுமைப்பாயசம்(Wheet Payasam)

தேவையானவை :

உடைத்த கோதுமை(Cracked Wheet) - 1 கப்
பால் - 4 கப்
வெல்லம் - 2 கப்(6 அல்லது 7 அச்சு வெல்லம்)
முந்திரி & உலர்ந்த திராட்ஷை
நெய்





செய்முறை


  • கோதுமையுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும்.

  • அத்துடன் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  • 4 கப் பால் 2 கப்பாக குறையும் வரை சிறு தீயில் கொதிக்க விடவும்.

  • கடாயில் நெய் விட்டு முந்திரி , உலர்ந்த திராட்ஷை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

  • கொதிக்கும் கோதுமையில் வெல்லம் மற்றும் வறுத்த முந்திரி,திராட்ஷை சேர்த்து இறக்கவும்.

இதை சூடாகவும் சாப்பிடலாம். அல்லது fridgeல் வைத்தும் சாப்பிடலாம்.

கோதுமை மற்றும் வெல்லம் சேர்ப்பதால் இதை டயட்டில் இருப்பவர்களும் சாப்பிடலாம்.

குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Related Posts with Thumbnails