Wednesday, June 23, 2010

மாங்காய் ஊறுகாய் - II

இது என் ஆந்திரா தோழி ஒருவருடைய ரெசிபி!.

தேவையானவை
மாங்காய் (பெரியது)- 2
உப்பு - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 1/2 கப்
கடுகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 10 பல்
நல்லெண்ணெய் - 3கப்.

செய்முறை

  • மாங்காயை துண்டுகளாக நறுக்கவும். (மாங்காய் கொட்டையின் மேல் உள்ள கடினமான பகுதியும் சேர்ந்து வருமாறு நறுக்கவும்)
  • இஞ்சி மற்றும் பூண்டை அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.(நான் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து அரைத்தேன்)
  • எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • கடாயி எண்ணெயை சூடாக்கி , பிறகு ஆற வைத்து சேர்க்கவும்.
  • ஒரு வாரம் ஊறிய பிறகு உபயோகிக்கலாம்.

இஞ்சி பூண்டு சேர்ப்பதால் நல்ல வாசனையாக இருக்கும்.

12 பேர் ருசி பாத்துட்டாங்க:

GEETHA ACHAL said...

ஆஹா...பார்க்கும் பொழுதே டாப் டக்கர்...சுவையினை கேட்டக்வே வேண்டாம்...படமே சொல்லிவிடும்.....அருமையான குறிப்பு....

Menaga Sathia said...

பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுதே....

Chitra said...

ssssssssssssss.........
mmmmmmmmmmmmouth-watering!

ஜெய்லானி said...

பார்க்கும் போதே தெரியுதே (மிளகாய் )ஆந்திரா ஸ்பெஷல்.. ர்.ர்.ர்.ர்.ர்.ர். ர்.ஒன்னு மில்லீங்க ஜொள் . கீ போர்டை நனைத்தி விட்டது.
சூப்பர்...!!

Prema said...

Very tempting pickle,mouthwatering...

first time here,feel very happy to see the tamil fonts,happy to following u...

do visit my blog,if time permits...
http://premascooking.blogspot.com

தெய்வசுகந்தி said...

நன்றி கீதா!!!!

நன்றி மேனகா!!!!!!

நன்றி சித்ரா!!!!

நன்றிங்க ஜெய்லானி !! ஊறுகாய் உங்களுக்குதான்!


நன்றி பிரேமா!!!!!!!!!!

ஜெய்லானி said...

//நன்றிங்க ஜெய்லானி !! ஊறுகாய் உங்களுக்குதான்!//

ஆஹா..நீங்க குடுக்கிறதுக்கு முன்னால நா எடுத்து சாப்பிட்டுட்டேனே தட்டு காலி !!

தெய்வசுகந்தி said...

//ஆஹா..நீங்க குடுக்கிறதுக்கு முன்னால நா எடுத்து சாப்பிட்டுட்டேனே தட்டு காலி !!//
அடுத்த ஊறுகாய் செஞ்சறலாம்!!!

தக்குடு said...

//இது என் ஆந்திரா தோழி ஒருவருடைய ரெசிபி!.// photola colour paathaaley nannaa theriyarthu...:)

ஜெய்லானி said...

வரும் போது ஒரு ஊறுகா பாட்டிலோடு வாங்க..

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

தெய்வசுகந்தி said...

நன்றிங்க ஜெய்லானி!!! இனிப்போட வர சொல்லுவீங்கன்னு பாத்தா, ஊறுகாய் பாட்டிலோட வரச்சொல்லறீங்க :-)!!!111

Mahi said...

போட்டோவே சூப்பர் கலரா இருக்கு..நான் இதுவரை ஊறுகாய் செய்ததே இல்லை.மாங்காய் ஊறுகாய் எனக்கு ரொம்ப பிடிக்கும்..ஆஸ்டினுக்கு ஒரு ட்ரிப் போட்டுடலாம் போலிருக்கே! :):) :P

Related Posts with Thumbnails