பிரவுன் அவல்(மட்டை அரிசி அவல்) - 1 கப்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கிய
து)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
இஞ்சி - 1 சிறுதுண்டு(பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (நான் அவசரத்துல போட மறந்துட்டேன்)
கறிவேப்பிலை - சிறிது
தாளிக்க
கடுகு
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு
உப்பு
எண்ணெய்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் அவல் எடுத்து, அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.(15 நிமிடங்கள்)
- அது ஊறும் நேரத்தில் வெங்காயம், மிளகாய், தக்காளி நறுக்கி வைக்கலாம்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.
- அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- அது வதங்கும் நேரத்தில் அவலை தண்ணீர் போக நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
- கடாயில் அவல் சேர்த்து நன்கு சூடாகும் வரை கலக்கவும்.
20 நிமிசத்துல செஞ்சரலாம். காலை நேர உணவுக்கு சீக்கிரமாகவும், சத்தாணதாகவும் சாப்பிடலாம். இதில் குட
மிளகாயும் சேர்க்கலாம்.
Sending this to Healthy recipe Hunt @ kurinjikathambam
10 பேர் ருசி பாத்துட்டாங்க:
மிக நன்றாக இருக்கு சுகந்தி!! அவலில் உப்புமா செய்வது ரொம்ப ஈஸி...
நன்றி மேனகா!!!!!
சுகந்தி நான் பார்த்துட்டேன் பா ரொம்ப நல்ல இருக்கு. அருமையோ அருமை ஊருக்கு போவதால் கமெண்ட் மாட்ரெட் எடுத்துட்டேன்.
குட்டி உங்கள் பொண்ணா? சோ ஸ்வீட்
உப்புமா ரொம்ப ஜோர் ,பிரவுன் அவல் வாங்கிட வேண்டியது தான்,வாங்கினா சும்மா சாப்பிட்டே காலி பண்ணிடுவேன்
)
நன்றிங்க ஜலீலா!! கமெண்ட் மாடரேஷன் இரூகும்னு நெனச்சிட்டு போட்டுட்டேன். அதனால டெலீட் பண்ணீட்டேன். அது என் பொண்ணுதாங்க!! ஊர்ல நல்லா enjoy பண்ணீட்டு வாங்க!!!!!!
easy to do... Thank you for the recipe.
நன்றி சித்ரா!!!!!!!!
HI FRIEND :)
VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/
சுகந்தி,
உங்களின் குறிப்புகள் எளிமையாகவும், நம் மண்வாசனைச் சுவையோடும் இருக்கின்றன. என்னைமாதிரிச் சமையலை வேகமாக முடித்துவிட்டு நகர்ந்துவிட நினைக்கிற ஆட்களுக்கும் பல குறிப்புகளை உங்கள் பக்கத்தில் பார்க்க முடிகிறது. நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க செல்வநாயகி!!! நானும் சீக்கிரம் சமையல் வேலையை முடிக்கனும்னு நெனைப்பேன்.
Post a Comment