தேவையானவை
பாசிப்பயறு - 1 கப்
பூசணிக்காய் - 1 கீத்து (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 8 ((நீள வாக்கில் நறுக்கியது)
கறிவேப்பிலை
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
கொத்தமல்லிதழை - சிறிது
உப்பு
எண்ணெய்
செய்முறை
- பாசிப்பயறை குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மல்லி தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதில் பூசணிக்காயை சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.
- பூசணிக்காய் வெந்ததும் வேக வைத்த பாசிப்பயறை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
9 பேர் ருசி பாத்துட்டாங்க:
ரொம்ப ஈசியான முறையில் சொல்லி கொடுத்து இருக்கீஙக் அருமை.
ந்நன்றி கீதா
நாங்க இதை பாசிப் பயறு கூட்டு என்று சொல்வேம், ஆனால் பூசனி போடமாட்டேம். நாலு சின்னவெங்காயம் தட்டிப் போட்டு சமைப்போம். உங்கள் முறையிலும் செய்து பார்க்கின்றேம். நன்றி.
good one
thank you
நன்றி தூயா
நன்றி சுதாகர். நாங்க அதுவும் செய்வோம். பாசிப்பயறு கடைசல்னு ஒரு குறிப்பு இருக்குது பாருங்க. இது பூசணிக்காய் கொஞ்சம் மிச்சம் இருந்ததால அதையும் போட்டு செஞ்சேன். நல்லா இருந்தது.
மா,
நல்ல பதிவு,
அம்மாகிட்ட காட்டி இருக்கேன். செஞ்சு தரதா சொல்லி இருக்காங்க.. சாப்டு பார்த்து சொல்றேன்..!!
நன்றிங்க ரங்கன்
Post a Comment