Friday, October 2, 2009

காய்கறி ரவா கிச்சடி

தேவையானவை


ரவை - 1 1/2 கப்
வெங்காயம் - 1/2
தக்காளி - 1/2
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை -சிறிது
புதினா - 1/4 கப்
கேரட் - 1
உருளைகிழங்கு - 1
காளிஃப்ளவர் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டாணி - 1/2 கப்
(காய்களை சிறியதாக நறுக்கி வைக்கவும்)


அரைக்க

இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 1
பட்டை - 1

தாளிக்க

கடுகு
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு
பிரியாணி இலை - சிறிது
கடல் பாசி - சிறிது




செய்முறை
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு ரவையை நன்கு வறுத்து எடுக்கவும்.
  • அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக போடவும்.
  • பிறகு அதில் வெங்காயம், மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
  • அதில் காய்கள், மஞ்சள்தூள் மற்றும் புதினா சேர்த்து வதக்கி 4 கப் தண்ணீர், மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்ததும், ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி தட்டாமல் கிளறி விடவும்.
  • மூடி போட்டு சிறுதீயில் வைத்து 5 நிமிடம் வரை புளுங்க விடவும்.
எண்ணெய் கொஞ்சம் அதிகமாக சேர்த்தால் நல்லா இருக்கும்.
நெய் மற்றும் முந்திரி சேர்த்தால் ரிச்சாக இருக்கும்.
இதில் மசாலா பொருள்கள் சேர்க்காமலும் செய்யலாம். ஆனா என் பையனுக்கு பிரியாணி வகை உணவுகள் பிடிக்கும்கறதால நான் முடிஞ்ச வரைக்கும் மசாலா சேர்த்துருவேன்.

10 பேர் ருசி பாத்துட்டாங்க:

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு சுகத்தி..எனக்கு ரொம்ப பிடிக்கும்..


அன்புடன்,

அம்மு.

Malini's Signature said...

கலக்கலா இருக்குங்க உங்க கிச்சடி...இதை ரவா பிரியாணின்னு சொல்லுங்க :-)

தேவன் மாயம் said...

கிச்சடி பிரமாதம்(பார்ப்பதற்கு)!

Jaleela Kamal said...

சுகந்தி ரொம்ப நல்ல இருக்கு நானும் செய்வேன் ஆனால் அரைத்து மசலாசேர்த்ததில்லை அப்ப மணம் இன்னும் தூக்கலாக இருக்கும்.

Menaga Sathia said...

சூப்பராயிருக்கு இந்த கிச்சடி.நானும் இதுபோல தான் செய்வேன்.உருளை சேர்க்கமாட்டேன்.

தெய்வசுகந்தி said...

நன்றிங்க
அம்மு

தெய்வசுகந்தி said...

நன்றிங்க ஹர்ஷினி அம்மா அப்படியும் சொல்லலாம்

தெய்வசுகந்தி said...

நன்றிங்க தேவன் மாயம். சாப்பிடறதுக்கும் நல்லா இருந்தது.:-)

தெய்வசுகந்தி said...

நன்றிங்க ஜலீலா. பையனுக்கு பிடிக்கும்கறதால மசாலா சேர்த்துருக்கேன்.

தெய்வசுகந்தி said...

நன்றிங்க மேனகா. முடிஞ்சவரை எல்லா காயும் சேர்த்துருவேன்.

Related Posts with Thumbnails