Tuesday, October 20, 2009

கீரை பொரியல்

தேவையானவை

கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1/4 (பொடியாக நறுக்கியது)
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு
கறிவேப்பிலை
கடலைப்பருப்பு - சிறிது
உளுந்தம்பருப்பு - சிறிது

செய்முறை

  • கீரையை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு தாளிக்கவும்.
  • வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு கீரையை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறு தீயில் கடாயை மூடி வைத்து வேக விடவும்.
  • நன்கு வெந்தவுடன், மூடியை எடுத்து விட்டு தண்ணீர் வற்றும் வரை கிளறி விட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து இறக்கவும்.

தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். இது Amarnath leaves . இந்த கீரைக்கு தமிழ்ழ என்ன பேர்னு தெரியாது. நம்ம ஊர் தண்டங்கீரை மாதிரியே இருக்கும்.

7 பேர் ருசி பாத்துட்டாங்க:

Menaga Sathia said...

//Amarnath leaves//முளைக்கீரை சுகந்தி.உங்க குறிப்பு நல்லாயிருக்கு.நான் மிளகாய்த்தூள் சேர்க்க மாட்டேன்.

பித்தனின் வாக்கு said...

ஆகா அம்மினி நம்ம ஊருங்களா. நல்லா இருக்கிங்களா. நானு தாராபுரங்க. உங்க ஊருல இருந்து 50கிலோமீட்டருங்க. இப்ப சிங்கையில கணக்கு பண்ணிக்கிட்டு இருக்கங்க. கீரைப் பொறியல் அருமை. இதை கீரைக் கூட்டு ஆகவும் செய்யலாம். நன்றி.

தெய்வசுகந்தி said...

நன்றி மேனகா.வரமிளகாய் சேர்த்தும் செய்யலாம்.

தெய்வசுகந்தி said...

ஆஹா ரொம்ப பக்கத்துல வந்துட்டீங்க பித்தனின் வாக்கு. என் கணவர் தாராபுரம் தான். கீரைக்கூட்டும் நல்லா இருக்கும் அதுக்கும் ஒரு பதிவு போட்டுடலாம்.

செல்வன் said...

இதில் எனக்கு பிடித்ததே கீரையில் மிளகாய்த்தூள் சேர்ப்பது தான் மிகவும் நன்றி.

தெய்வசுகந்தி said...

நன்றி செல்வன்

பித்தனின் வாக்கு said...

சமயம் கிடைக்கும்போது என் வித்தியாசமான சமையல் பதிவுகளைப் படிக்கவும். எங்க மாமா புதுப்பாளையத்தில் வி ஆர் ஓ வா இருந்தார். நான் பொள்ளாச்சியில் சாந்தி தியேட்டரில்தான் அம்மன் கோயில் கிழக்காலே படம் பார்த்தேன். நன்றி. உங்கள் கனவர் தாராபுரத்தில் 1980ல் படித்தவர் என்றால் கண்டிப்பாய் என்னை அவர் அறிவார். என் பெயர் சுதாகர், தாராபுரம் அலோசியஸ் பள்ளி எதிரில் எங்கள் வீடு உள்ளது.

Related Posts with Thumbnails