தேவையானவை
வெண்டைக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1/2
கறிவேப்பிலை
பூண்டு - 5 பல்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
புளித்தண்ணீர் - 1/4 கப்
உப்பு
பெருங்காயத்தூள் - சிறிது
தேங்காய்ப்பால் -1/4 கப்
கடுகு
வெந்தயம்
உப்பு
எண்ணெய்
செய்முறை
- வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு , சிறு தீயில் நன்கு வதக்கி எடுக்கவும்.
- கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- அதில் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் , புளித்தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்ததும், தேங்காய்ப்பால் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
- நன்கு சுண்டியதும் இறக்கிவிடவும்.
பருப்பு சாதம், அல்லது வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.
9 பேர் ருசி பாத்துட்டாங்க:
நிறைய தடவை செஞ்சு பார்த்துட்டேன் பட் எதோ ஒண்ணு மிஸ் ஆகுது இன்னொரு வாட்டி உங்க புரொசிஜர் படி லேப்ல டிரை பண்ணி பாக்குறேன் டாங்க்யூ :)
நன்றிங்க ஆயில்யன். செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க.
சுகந்தி ரொம்ப அருமையான டிஷ்.
உங்க செய்முறை அருமையா இருக்கு சுகந்தி.நிச்சயம் அடுத்தமுறை செய்து பார்க்கிறேன் உங்கள் முறைப்படி..
நன்றிங்க ஜலீலா, மேனகா!
Hai suganthi, for puule kulambu if v use gingerly oil it will give more taste, suggest a suggestion.
unga kuzambuellam nall iruku nan try panren
unga kuzambuellam nall iruku nan try panren
unga kuzambuellam nall iruku nan try panren
Post a Comment