கொங்கு நாட்டில் பிரபலமான உணவு இது. அரிசி பருப்பு சாதம்னும் சொல்லலாம்.
அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
தேங்காய் துறுவல் - 1 டேபிள்ஸ்பூன் (optional)
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு
எண்ணெய்
உப்பு
செய்முறை
- குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் தாளித்து, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- அதில் மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய் சேர்த்து வதக்கவும்.
- அதில் கழுவிய அரிசி, பருப்பு சேர்த்து 5 கப் தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரின் மூடியை போட்டு 1 விசில் வந்ததும், மிகச்சிறுதீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.
- கடைசியாக மல்லி இலை தூவி கலக்கவும்..
நெய்யுடன் கலந்து சாப்பிடலாம்.
இதற்கு கத்தரிக்காய் புளிக்குழம்பும் நன்றாக இருக்கும்.
2 பேர் ருசி பாத்துட்டாங்க:
Let me try ..TX
நன்றி தூயா
Post a Comment