எப்பவும் சக்தி மசாலா உபயோகிச்சு முட்டை கறி செய்யறது அலுத்துப் போனதால இது புது முயற்சி.
தேவையானவை
முட்டை - 6
வெங்காயம் - 1 (பொடியாக்க நறுக்கியது)
பச்சை மிளகாய் -2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
அரைக்க
தேங்காய் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
- முட்டையை வேகவைத்து ஓடு உறித்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- பின்பு அரைத்த விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- முட்டையை பாதியாக வெட்டி, அதில் 3 முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து பொடித்து, கொதித்த கலவையில் சேர்த்து கலக்கவும்.
- மற்ற முட்டைகளையும் சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும்.
சாதம், சப்பாத்தி இரண்டுக்கும் நல்ல combination.
6 பேர் ருசி பாத்துட்டாங்க:
உங்க ரெசிபி ரொம்ப நல்லா இருக்குங்க...போட்டோஸ் பாத்தாலே சாப்பிடனும் போல இருக்கு ... :-)
நன்றிங்க ஹர்ஷினி அம்மா.
உண்மையைச் சொன்னா, சமையலைப் பத்தி அனா, ஆவன்னா தெரியாத நானே அருமையாய் சமையல் பண்ணிட்டேன்.
நன்றி.
சங்கர்.ந
இப்போ தான் முட்டை கறி தயாரித்து சாப்பிட்டேன், ரொம்ப நல்ல இருந்தது, மிக்க நன்றி
i like very much this recipy
and always help for me
Supera vandhudhunga!!! Thank you.
Post a Comment