தேவையானவை
வெந்தயக்கீரை - 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
சாதம் - 11/2 கப்
வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் கீறியது)
தக்காளி - 1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
கடுகுமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை
- சாதத்தை உதிரியாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பட்டை, கிராம்பு போட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
- அதில் வெந்தயக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வெந்ததும், சாதம் சேர்த்து நன்கு கலக்கவும்.
3 பேர் ருசி பாத்துட்டாங்க:
சாப்பிடனும் போல் உள்ளது. பார்சல் அனுப்புங்கள். எனது மனைவியை செய்ய சொல்கிறேன்.
"வெந்தயக் கீரை சாதம்" நன்றாக உள்ளது தெய்வசுகந்தி.
i will try
Post a Comment