Wednesday, June 16, 2010

பீட்ரூட் இலை சாம்பார்

பீட்ரூட் இலையில் அதிக ஆளவு இரும்புச்சத்து உள்ளது. அத்துடன் calcium, magnesium, copper, phosphorus, sodium ஆகியவையும் உள்ளது.

(Thanks to google)
தேவையானவை:

துவரம் பருப்பு - 1 கப்
பீட்ரூட் இலை - 1 கட்டு
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 1/2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு

தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது

செய்முறை
  • பூண்டு சேர்த்து பருப்பை வேகவைக்கவும். குக்கரில் வைக்காமல், பாத்திரத்தில் வைத்து வேக வைத்தால் பருப்பு கரையாமல் இருக்கும்.
  • பீட்ரூட் இலையை பொடியாக நறுக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • அதில் பீட்ரூட் இலை, மிளகாய்த்தூள், சாம்பார்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  • அதில் வேக வைத்த பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

13 பேர் ருசி பாத்துட்டாங்க:

எல் கே said...

இங்க கிடைகிற பொருளை நீங்க சொலழ்வே மாட்டீங்களா அம்மணி

Menaga Sathia said...

இதுவரை நான் வாங்கிய பீட்ரூட்டில் இலையே பார்த்ததில்லை சுகந்தி....கீரை சாமபார் மாதிரி நன்றகயிருக்குமென நினைக்கிறேன்...

தெய்வசுகந்தி said...

நான் என்னங்க பண்ணட்டும் கார்த்திக்!!! இங்கே கிடைக்கறதை வெச்சுதானே செய்ய முடியும்.

தெய்வசுகந்தி said...

மேனகா, இங்கே பீட்ரூட் இலையோடவே கிடைக்கும். இதில பொரியலும் நல்லா இருக்கும்.

Chitra said...

Thats a good use of it.. Thank you.

Starjan (ஸ்டார்ஜன்) said...

பீட்ரூட் இலை சாம்பார் ரொம்ப நல்லாருக்கு..

தெய்வசுகந்தி said...

நன்றி சித்ரா!!!
நன்றிங்க ஸ்டார்ஜன்!!!!!!!

நானானி said...

பீட்ரூட் சாம்பார்...சூப் போல குடிக்கலாம், நல்லாருக்கு.

நான் பீட்ரூட்டை பொரியல் பண்ணிவிட்டு கீரையை பாசிப்பருப்பு போட்டு துவட்டிவிடுவேன்.

Mahi said...

சாம்பார் நல்லா இருக்கு சுகந்திக்கா! நான் இந்தக் கீரையை பொரியலாய்த்தான் செய்திருக்கேன்.அடுத்தமுறை சாம்பார் செய்து பார்க்கிறேன்.

தெய்வசுகந்தி said...

நன்றிங்க நானானி!!! இது பாசிப்பருப்போடயும் நல்லா இருக்கும்.

நன்றி மகி!!! பொரியலும் நல்லா இருக்கும்.

மசக்கவுண்டன் said...

மார்க்கெட்டில் வெகு சில சமயங்களில்தான் பீட்ரூட் இலையுடன் கிடைக்கும். நன்றாக கழுவி உபயோகிக்க வேண்டும். சத்துக்கள் விவரம் உபரி விவரம்.

Jaleela Kamal said...

நானும் இதுவரை பீட் ரூட் இலைய பார்த்ததில்லை

போட்டோ இருந்தா அதையும் சேர்த்து போடுஙக்ள்

தெய்வசுகந்தி said...

நன்றிங்க அய்யா!!!இங்கே எப்பவுமே பீட்ரூட் இலையோட கிடைக்கும்ங்க!!!
@ ஜலீலா நன்றிங்க!!! பீட்ரூட் இலை போட்டோ போட்டாச்சுங்க!!!!

Related Posts with Thumbnails