தேவையானவை
பிரவுன் அரிசி(brown long grain rice) - 4 கப்
உளுந்து - 1/4 கப்
பிரவுன் அவல் - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு
செய்முறை
- அரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
- அவலை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுத்து உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும்.
- தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
தோசை ஸ்பான்ஞ் மாதிரி மிருதுவாக இருக்கும்.கார சட்னியுடன் சாப்பிட நல்லா இருக்கும். இதில் அவல் சேர்க்காமல் செய்தால் நல்ல க்ரிஸ்பியாக வரும்.
ஈசி கார சட்னி
வெங்காயம் - 1
தக்காளி - 1
மல்லித்தளை - 1/4 கட்டு
வரமிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
புளி சிறிது
உப்பு
அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுத்து, சிறிது நல்லெண்ணெய் தாளித்து கொட்டவும்.
13 பேர் ருசி பாத்துட்டாங்க:
Superb healthy dosai Suganthi..yummy chutney..love this combo.
நன்றி நிது!!!!!!!
Good one.... Thank you for this nice recipe. :-)
இந்த பிரவ்ன் அரிசி இங்க கிடைக்குமா (சென்னையில்)
சூப்பர்ப் சத்தான தோசை...சுகந்தி ...இதில் உளுத்தம் பருப்பு 1/4 கப் தான் சேர்த்து கொள்ள வேண்டுமா...நானும் இதே மாதிரி தான் 4 :1 விகிதத்தில் பிரவுன் ரைஸுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து செய்தேன்..அருமையாக இருந்தது...அவல் சேர்ப்பதால் உளுத்தம் பருப்பினை குறைந்து கொள்ளலாமா...சட்னி சூப்பர்ப்...அருமையான காம்பினேஷன்...
நன்றி சித்ரா!!!!
@ LK, சென்னைல கிடைக்குமான்னு தெரியலீங்க!!!
@ கீதா,நன்றி!!!!!!!
நான் தோசைக்கு அரைக்கறப்ப எப்பவுமே உளுந்து குறைச்சுதான் போடுவேன் அப்போதான் க்ரிஸ்பியாக வரும்.
புதுமனை யுடன் புது சமையலரையும் சூப்பரா இருக்கு
அதோடு சத்தான தோசை கார சட்னி பிரமாதம்.
நன்றிங்க ஜலீலா!!!
பிரவுன் ரைஸ் தோசை+சட்னி சூப்பர்ர் காம்பினேஷன்.இதில் இட்லியும் செய்து பாருங்கள்.பஞ்சு மாதிரி இருக்கும்.....
நன்றி மேனகா! இதில இட்லி பண்ணினதில்ல, அடுத்த முறை செஞ்சு பார்க்கிறேன்
தோசை நல்லாருக்கு.
காரச்சட்னி மிக நல்லாருக்கு.
hi madam,
this is mehala.... i have a doubt.... is kerala rice called brown rice? dat big size brown kerala rice ....or anyth seperately otherthan dis.... pls clarify thank u............
மேகலா, இங்கே அமெரிக்கன் Storeல கிடைக்கிற பிரவுன் ரைஸ்தான் உபயோகித்தேன்.
Post a Comment