தேவையானவை
அரிசி(சோனா மசூரி) - 2 கப்
தட்டைப்பருப்பு(காராமணி உடைத்தது) - 1/2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
வர மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
அரிசி(சோனா மசூரி) - 2 கப்
தட்டைப்பருப்பு(காராமணி உடைத்தது) - 1/2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
வர மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
- அரிசி, பருப்பை கழுவி ஊற வைக்கவும்.
- குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும், அரிசி பருப்பு சேர்த்து கலந்து, 5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.
- ஒரு விசில் வந்ததும், சிறு தீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.
இது கொங்கு நாட்டு பகுதியில் அதிகம் செய்யப்படும் உணவு. புளிக்குழம்புடன் சாப்பிட நல்லா இருக்கும்.ஊறுகாயுடனும் சாப்பிடலாம். வேலை நிறைய(தீபாவளி பலகாரம் செய்யறது) இருக்கறப்போ சீக்கிரமா சாப்பாடு செய்யனும்னா இந்த மாதிரி பருப்பு சாதம் வகைகள் எளிதாக செய்து விடலாம்.
2 பேர் ருசி பாத்துட்டாங்க:
தட்டைப் பருப்பு சூப்பர்!!
நீங்க நான் சொன்ன அளவில் தட்டை செய்து பாருங்க.தட்டும் போது ரொம்ப மொத்தமா இருக்ககூடாது.ரொம்ப மெல்லியதாக இருக்ககூடாது.நல்லா வரும் செய்ங்க சுகந்தி.நேரமில்லாத்தால் லேட் பதில் சாரிப்பா...
நன்றி மேனகா. செஞ்சு பார்க்கிறேன்.
Post a Comment