தேவையானவை
துவரம் பருப்பு - 1 கப்
புளித்தண்ணீர் - 1 கப்
எண்ணெய்
உப்பு
உப்பு
முருங்கைக்காய்
சின்ன வெங்காயம்
அவரைக்காய்
உருளைகிழங்கு
கேரட்
பட்டாணி
கத்தரிக்காய்
காளிஃப்ளவர்
சவ்சவ்
வாழைக்காய்
(அனைத்தும் சேர்ந்து 3 கப்)
தாளிக்க
வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை
நெய் - 1 டீஸ்பூன்
வறுத்து பொடிக்க
வரமிளகாய் - 14
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டுகள்
ஏலக்காய் - 1
கறிவேப்பிலை
(1/2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்து பொடிக்கவும்)
செய்முறை
- அரிசி மற்றும் பருப்பை கழுவி ஊற வைக்கவும்.
- குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்கள் அனைத்தையும் சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கலக்கவும்.
- அதில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து கலந்து, புளித்தண்ணீர் மற்றும் 10 கப் தண்ணீர் சேர்த்து, உப்பும் சேர்த்து கலந்து மூடி வைத்து 6 விசில் வரை விடவும்.
- கடாயில் நெய் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், குக்கரில் உள்ள சாதத்துடன் கலந்து, மல்லித்தழை தூவி வைக்கவும்.
இது செய்வதற்கு சுலபமானது. சுவையும் நன்றாக இருக்கும்.
சாதத்துக்கு சேர்ப்பதைப்போல தண்ணீர் இரண்டு மடங்கு சேர்க்க வேண்டும்.எல்லா காய்களும் சேர்க்கலாம்.
12 பேர் ருசி பாத்துட்டாங்க:
nalla irukku try paNren
http://susricreations.blogspot.com
superr suganthi!!
பார்த்ததும் பசிக்க ஆரம்பிச்சிட்டது...
நன்றி சுவையான சுவை,
மேனகா
சீக்கிரம் செஞ்சு சாப்பிடலாம் ரவி. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
super
gayathriramar
nice
சகோதரி..இங்கு பெங்களூரில் செவ்வாய் கிழமை அனைத்து ஓட்டல்களிலும் இந்த பிசிபேலபாத் கிடைக்கும் ..ஆனால் மிச்சரை மேலே தூவிதருவார்கள்.. நானும் இப்போது செய்து பார்த்தேன்.. அதிகம் நேரம் பிடிக்கிறது.. தாங்கள் ஏன் என் போன்ற அனைத்து பேச்சுலர்களுக்கும் பயன் தரும் வகையில் எளிய அதாவது கால் மணி நேரம் முதல் அரைமணி நேரத்திற்குள் முடிக்கும் படியான எளிய சமையல் வகைகளை கூற கூடாது?(சேமியா உப்புமா எப்படி செய்வது?) .. அனைத்தும் இப்போது பக்கட்டுகளிலேயே கிடைக்கிறது..இஞ்சி பூண்டு பேஸ்டு முதல் அனைத்தும்.. அவ்வறானவற்றை உபயோக படுத்தி செய்முறையை அளிப்பீர்களானால் உங்களுக்கு பேச்சுலரக்ள் சார்பில் கோயில் கட்டபடும்.. குடமுழுக்கு செய்யபடும்..என்பதை எங்கள் சங்கம் சார்பாக அறியதருகிறேன்..
நன்றிங்க க்ரிஷ்
புரட்சிகர தமிழ் தேசியன், மூச்சு வாங்குதுங்க பேர சொல்லறதுக்குள்ள :)
வருகைக்கு நன்றிங்க. ஈசியானதும் செஞ்சரலாங்க, ஒரு வழியா டெக்ஸாஸ் போயி செட்டில் ஆனதும்.
அன்புடையீர், நன்றி;சாம்பார் சாதம், காளான் குழம்பு செய்தேன்;வழக்கம்போல்
மற்றவர்கள் பாராட்டும் கிடைத்தது, உங்களால்.
இப்படிக்கு,
தி.இரத்தினவேலு,
ஆனைமலை
மிகுந்த நன்றிகள்
Post a Comment