சந்தகை கொங்கு பகுதியில் பிரபலமான உணவு. அதிலும் புதுசா கல்யாணமான பொண்ணு மாப்பிள்ளை விருந்துக்கு சந்தகைதான் செய்வாங்க.
சந்தகை செய்யறது ஒரு பெரிய வேலை!. முடிஞ்ச வரைக்கும் frozen வாங்கிருவேன். ஆனா எப்போவாவது வீட்லயே செய்யறதும் உண்டு.
தேவையானவை :
புழுங்கல் அரிசி - 4 கப்
செய்முறை
- புழுங்கல் அரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து, கழுவி நைசாக அரைத்து எடுக்கவும்.
- கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.(கொழுக்கட்டை பதம்).
- வறுத்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லித்தட்டில் வைத்து வேக வைக்கவும். (அல்லது மாவை வறுக்காமல் இட்லியாக செய்தும் சந்தகை செய்யலாம்.)
- கொழுக்கட்டை சூடாக இருக்கும் போதே
சந்தகை மரத்தில் வைத்து பிழிந்து எடுக்கவும்.(கொழுக்கட்டை சூடு ஆறிவிட்டால் பிழிய வராது)
இதில் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிடலாம்.
தேங்காய்ப்பால் செய்ய:
தேவையானவை
தேங்காய்- 1
ஏலக்காய் - 4
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
- தேங்காயை துருவி, ஏலக்காய் , தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் அரைத்து பிழிந்து பால் எடுக்கவும். (2 முறை செய்யலாம்.)
- அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சூடு பண்ணவும். நன்கு கலந்து விடவும்.
- சர்க்கரை கரைந்து, லேசாக சூடு ஆகியதும் இறக்கி விடவும்.
- கொதிக்க விடக்கூடாது.
தக்காளி சந்தகை, புளி சந்தகை அல்லது தயிர் சந்தகையும் செய்து சாப்பிடலாம்.
24 பேர் ருசி பாத்துட்டாங்க:
அட இது அந்த நூல்நூலா இருக்குமே ...சிக்கல் ச்சே..பேரு மறந்து போச்சே...ஆங் ,,இடியாப்பம் ,,இடியாப்பம்..இது அது மாதிரியே ..இருக்கு..
ஆமாங்க ஜெய்லானி! இது இடியாப்பம் மாதிரிதான் இருக்கும். ஆனா செய்யற முறை வேற.
இடியாப்பம் பச்சரிசி மாவுல பண்ணுவாங்க, சந்தகைக்கு புழுங்கல் அரிசி உபயோகிப்போம்.
nalla irukkunga
நன்றி திவ்யாம்மா!!!
என்னடா புதுப்பெயரா இருக்கேன்னு ஓடியாந்தேன்.
அப்புறம் பார்த்தால்............ நம்ம சேவை!!!! நாட்டுக்குத் தேவை!!!!!
இப்பெல்லாம் சீனர்கள், 'தாய்'கள் மடியாத் தயாரிச்சு அனுப்புவது எங்கூரிலேயே கிடைக்குதுன்னா பாருங்களேன்:-))))
ennoda favourite....yaaravathu senju kuduthaa nalla saapuduven .. ungolodatha paartha orae home sick aiduchu... hmm
நன்றிங்க துளசி!!! ஆமாங்க ரெடிமேடா எல்லா பக்கமும் கிடைக்குது. ஆனாலும் நம்ம செய்யற ருசி வர்ரதில்லிங்க!!!
நன்றி பவித்ரா!!! ஆஸ்டின் வாங்க சாப்பிட்டு போகலாம்:-))
சூப்பராயிருக்கு சுகந்தி...சந்தகை சாப்பிடனும் போல் இருக்கு..
நன்றி மேனகா!!!!1
சந்தகை மெஷினே வாங்கிட்டு வந்திருக்கீங்களா? சூப்பர் போங்க! அருமையா இருக்கு சுகந்திக்கா.வீட்டு ஞாபகம் வருதே!!!!!!!!!!!
எதுக்கும் எச்சரிக்கையாவே இருங்க,திடீர்னு ஒருநாள் ஆஸ்டின் வந்துருவேன்.:)
Sandagai making automated.
NuHom SevaiMagik
from Tamilmanam Kasi.
Mahi, You are always welcome!!!
Indian, Thanks!!!
சுகந்தி, சூப்பர். அருமையா இருக்கு.
yummy to look ,super:)
super presentation.is it easy or hard to make santhakai?
நன்றி வானதி!
நன்றி அனு!!
ஆசியா, கொஞ்சம் கஷ்டமான வேலைதான்.
இடியாப்பம் மாதிரி இருக்குமோ? பிழியுற கருவி, பார்க்கவே சூப்பரா இருக்குதுங்க.
கோயமுத்தூர் ஸ்பெஷல் பலகாரத்தை இன்டர்நேஷனல் லெவலுக்கு கொண்டு போயாச்சு. நடக்கட்டும்.
ஊர்ல இருந்து போறப்பவே சந்தகை மிஷினும் கொண்டு போயாச்சா?
@சித்ரா, ஆமாங்க இடியாப்பம் மாதிரிதான் இருக்கும்.
@ டாக்டர் ஐயா, ஆமாங்க முதல்ல சந்தகை மரம் இல்லாம முறுக்கு குழல்ல செஞ்சு அவஸ்தை பட்டதற்கு அப்புறமாதான் சந்தகை மரம் எடுத்துட்டு போனேன்.
என்னோட முதல் வருகை. வாவ் நல்ல ரெசிப்பி. எங்க வீட்டில் அடிக்கடி அம்மா செய்வாங்க. இதற்க்கு தொட்டு சாப்பிட புளிசேர்+பப்படம். சூப்பரங்க நானும் இந்த மெஷின் எடுத்துட்டு வந்திருக்கேன். ஆனால் இதுவரை அதை திறந்து கூட பார்த்ததில்லை.
எனக்கு ரொம்ப பிடித்த அயிட்டம்.
இதற்க்கு இப்படி கூட பேரா. பகிர்ந்தற்க்க்கு நன்றி.
www.vijisvegkitchen.blogspot.com
ungal blog super,eppa than parkiren...parampariya kongu samayal ennaku romba pidikum...unga blog arummaiya ah eruku...
வாவ்...மறாக்க முடியாத நாட்கள அவை. ஞாயிரு விடியறதே இந்த சந்தகை பிழியற மிஷின்லதேன். அண்ணன், அப்புறம் நானு, அப்புறம் என் தம்பின்னு மாத்தி மாத்தி செய்வோம்...கஷ்டமா இருந்தாலும் அதோட டேஸ்டுக்கு பழகி போன ஒரு வேலை. ஞாயிறுன்னா சந்தகையும் பூரியும்தேன் வழக்கமான மெனு. இப்பவும் ஊருக்கு போறப்ப எல்லாம் அம்மாகிட்ட அந்த மெஷினை எடுங்க செய்யலாம்னு சொல்லிட்டு தூங்கிடுவேன். அமாவும் வயசாகிவிட்டதால் மளிகை கடையில் அன்னன்னிக்கி ஃப்ரெஷ்ஷா கிடைக்கிற பேக்கட்டை கொண்டாந்து காரமும் இனிப்பும் (தேங்காய்ப்பாலுடன்) செஞ்சிடுவாங்க. தேங்காய்ப்பால் சந்தகை ரமதான் மாசம் சஹ்ர் நேரத்திலும் நாங்க ஆசையாய் சாப்பிடும் ஒரு உணவு. இங்கே வர்றப்ப சேவை மேஜிக் குக்கர் வாங்கிட்டு வந்தேன். அதனால அரிசி மாவு, கோதுமை மாவு, ராகி மாவுன்னு அப்பப்ப செய்வேன். இருந்தாலும் அந்த பழைய முறை மாதிரி வராது போங்க. கலக்குங்க. நீங்க எந்த ஊரில இருக்கீங்க?
அன்னு முதல் வருகைக்கு நன்றிங்க!!ஆமாங்க கொஞ்சம் கஷ்டமான வேலையா இருந்தாலும் அந்த ருசிக்காக அப்பப்ப செய்யறதுதான். நானும் அடுத்த முறை சேவை மேஜிக்தான் வாங்கிட்டு வரணும். நான் ஆஸ்டின், டெக்ஸாஸ்ல இருக்கிறேன்.
Post a Comment