தேவையானவை:
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 25 பல் (தோல் நீக்கி நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
புளித்தண்ணீர் - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 அல்லது 1 1/2டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது
தேங்காய் - 1 டீஸ்பூன்
(நன்கு வறுத்து அரைக்கவும்)
செய்முறை:
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது
தேங்காய் - 1 டீஸ்பூன்
(நன்கு வறுத்து அரைக்கவும்)
செய்முறை:
- கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருள்களை போட்டு, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும், புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அரைத்த விழுதை சேர்த்து, சிறிது நீர் சேர்த்து , நன்கு கொதிக்க விட்டு எடுக்கவும்.
சாதம், உப்பு பருப்பு, பூண்டு குழம்போட நல்லா இருக்கும். செஞ்சு 2 நாள் கழிச்சு சாப்பிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
கத்தரிக்காய் அல்லது கோவைக்காய் சேர்த்தூம் செய்யலாம்.
17 பேர் ருசி பாத்துட்டாங்க:
எங்க வீட்டிலேயும் இதேமாதிரிதான் பூண்டுகுழம்பு செய்வாங்க..சூப்பரா இருக்கு!
சீக்கிரம் செஞ்சு பாக்கறேன்
haa haa very tempting recipe...
சுகந்தி, மிகவும் அருமையா இருக்கு.
ஆரோக்கியமான குழம்பு ரொம்ப நல்லா இருக்கு
//புளித்தண்ணீர் - 1 கப் //
எங்க வீட்டு கப்புல நாலு லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அது போதுமா ..ஹி..ஹி..
எண்ணெய் பிரிந்து இருக்கும் குழம்பை பார்த்தாலே....... ம்ம்ம்ம்..... சூப்பர்!
இந்த தளம் உங்கள் சமையல் தளத்தை அனைவரும் பார்வையிட உதவியாக இருக்கும். இந்த தளம் உங்களுக்கு பயனுல்லதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி.
http://cookeryindexer.blogspot.com/
அருமையா இருக்கு.
நன்றி மகி!!!
நன்றி கார்த்திக்!
நன்றி மேனகா!
நன்றி வானதி!!
நன்றி சினேகிதி!!
நன்றி ஜெய்லானி! அப்புறம் அது புளீஈஈஈஈஈஈஈஈப்பு குழம்பாயிரும்!:-)
நன்றி சித்ரா!
நன்றி பிரபா!!
நன்றி புவனேஸ்வரி!!!
பார்த்தாலே நாவில் நீர் ஊறுகிறது சுகந்தி....
பூண்டு குழம்பில் நீங்கள் கடைசியில் சொன்னது போல், கத்தரி சேர்த்தால் படு சூப்பரா இருக்கும்.....
Chilles or peppers have not been mentioned in the recipe perhaps by oversight.Please mention how much to be used
Regards
Baskaran
நன்றிங்க பாஸ்கரன். சரி பண்ணிட்டேன்.
ஏங்க இன்னும் வீட்டில பூண்டு குழம்பு சரியாகலையா ..? மாச கணக்குல அப்படியே இருக்கு..ஹி..ஹி..
பூண்டு குழம்பு காலி ஆகி விட்டது.... அடுத்த ஐட்டம் எப்போ?
@ ஜெய்லானி & சித்ரா, வந்து , பார்த்து, கேட்டதற்கு நன்றிங்க! திங்கள் கிழமை அடுத்த பதிவு வந்துரும்.
பூண்டு குழம்பு கம கமக்குது.
பதிவு போட்டு ரொமப் நாள் ஆகுது போல தெய்வசுகந்தி
Post a Comment