எங்க ஊர்ப்பக்கம் இதை சந்தகைன்னுதான் சொல்லுவாங்க. ஆனா மத்த பக்கம் இடியாப்பம் அல்லது சேவைன்னும் சொல்லறாங்க. அதே மாதிரி செய்முறையும் மாறும். சந்தகை செய்யறதுக்கு நிறைய வேலை செய்யனும்கிறதால, இப்ப frozen இடியாப்பம் வாங்கிக்கறது.
தேவையானவை
frozen இடியாப்பம் - 1 பாக்கெட்
வெங்காயம் - 1 கப் (நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 8
தக்காளி - 1 (நறுக்கியது)தக்காளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்(அல்லது இன்னும் 1 தக்காளி)
கறிவேப்பிலை
கடுகு
எண்ணெய்
இஞ்சி பூண்டு அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பொடிக்க
சோம்பு - 2 டீஸ்பூன்
பட்டை - 5 (1 இன்ச் அளவு)
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கசகசா - 1 டீஸ்பூன்
செய்முறை
- இடியாப்பத்தை microwave ல் சூடு பண்ணிக்கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பொடி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பிறகு தக்காளி, தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- பிறகு இடியாப்பம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
2 பேர் ருசி பாத்துட்டாங்க:
yummmmmmmmmmmmmm
mm super ippave sapidalam pola iruku
Post a Comment