Saturday, October 10, 2009

பலாப்பழ ஹல்வா

தேவையானவை


பலாச்சுளை - 20
சர்க்கரை - 1 கப்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10


செய்முறை

  • பலாச்சுளைகளை மிக்சியில் போட்டு நீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.
  • நான் ஸ்டிக் கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.
  • அதே கடாயில் பழக்கூழை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.(அரைத்த பழக்கூழ் 1 1/2 கப்புக்கு 1 கப் சர்க்கரை சேர்க்கவேண்டும்)
  • கடைசியில் வறுத்து வைத்த முந்திரி கலக்கவும்.


செய்வதற்கும் எளிது. சுவையாகவும் இருக்கும். இது டின் பலாப்பழத்தில் செய்தது.

7 பேர் ருசி பாத்துட்டாங்க:

Menaga Sathia said...

பலாப்பழத்தில் அல்வாவா சூப்பரா இருக்குப்பா.

பலாச்சுளை ரொம்ப ப்ரெஷ்ஷா இருக்கு.ஆசையா கிளப்பிட்டீங்க சுகந்தி.

தெய்வசுகந்தி said...

நன்றி மேனகா. எனக்கு பலாப்பழம் ரொம்ப பிடிக்கும். இங்க ஃப்ரெஷ் பழம் கிடைக்கிறதில்ல. அதனால டின்ல இருக்கிறது வாங்கினேன். ஆனா preservative smell அதிகமா இருந்ததால இப்படி ஏதாவது பண்ணினால்தான் சாப்பிட முடியுது.

Jaleela Kamal said...

சுகந்தி பலா சுளைய பார்த்துமே நாக்கு ஊறுது அதுவும் ஹல்வா ம்ம் கேட்கவே வேண்டாம்.

R.Gopi said...

deivasuganthi....

வணக்கம்... முதன் முதலில் இப்போது தான் உங்க்ளின் வலைப்பக்கம் வருகிறேன் (மேனகா வலையின் மூலமாக.... நன்றி மேனகா...).. வரவேற்பே ரொம்ப இனிப்பா இருக்கு .... அதான்... இந்த பலாப்பழ ஹ‌ல்வா...

முந்திரியும், தேனும் ஒழுகும் இந்த ஹல்வாவை அப்படியே சாப்பிட்டு விடலாம் போல் இருக்கிறது...

நல்லா சமையல் பண்ணுவீங்க போல இருக்கு...

ஃப்ரீயா இருக்கறச்சே வந்து எல்லாத்தையும் படிக்கறேன்... ஓகேவா...

நீங்க, இப்போ என்னோட தீபாவளி பதிவை படிங்க... அங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் இருக்கு...மறக்காம / மறுக்காம வாங்கிக்கோங்க...

கண்டிப்பாக வருகை தரவும்...

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

அப்படியே இது என்னோட இன்னொரு வலைப்பதிவு... இங்கேயும் கொஞ்சம் எழுதி இருக்கேன்... ஆனா, சமையல் பத்தி இல்ல... வந்து படிங்கோ...

www.jokkiri.blogspot.com

தெய்வசுகந்தி said...

நன்றிங்க ஜலீலா

தெய்வசுகந்தி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபி. உங்க பதிவுல வந்து பரிசு வாங்கிட்டேன். அதுக்கும் நன்றி

Asiya Omar said...

சூப்பராக இருக்கு சுகந்தி.

Related Posts with Thumbnails