தேவையானவை
முளைப்பயிறு - 2 கப்
(பாசிபயறும், தட்டைப்பயறும் கலந்து முளைக்கட்டியது)
சுரைக்காய் - 2 கப்
(சிறியதாக நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
கடுகு - சிறிது
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் நிறம் மாறியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பிறகு சுரைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதில் முளைப்பயிறு சேர்த்து, மிளகாய்த்தூள், சாம்பார்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.
- முளைப்பயிறு சீக்கிரம் வெந்து விடும். வேகவில்லை என்றால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- தண்ணீர் சுண்டியதும் இறக்கவும்.
சத்தான, சுவையான கறி இது. சாதம் மற்றும் சப்பாத்தி இரண்டுக்கும் நன்றாக இருக்கும்.
6 பேர் ருசி பாத்துட்டாங்க:
whoa!different combination..a must try dish..
நன்றி அம்மு மது! ஈசியும் கூட. செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க
நம்ம ஊரு பக்கம் நிறைய முளைகட்டிய ரெசிபி இருக்கும்...எனக்கும் இப்ப தான் ஞாபகம் வருது....இந்த குழம்பு எங்க மாமி சூப்பரா செய்வாங்க.....அப்புறம் உங்க பிளாக் ரொம்ப நல்லா இருக்குங்க...முதலிலே ஒரு முறை பாத்து இருக்கேன்...ம்ம்ம் இன்னும் உங்களை பலோ பன்ன வேண்டியது தான் :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஹர்ஷினி அம்மா. குழந்தைகளுக்கு சத்தா குடுக்கறதுக்காக புதுசு புதுசா செய்ய வேண்டியிருக்குது.
சுகந்தி ரொம்ப அருமையான சத்தான டிஷ்,
நன்றிங்க ஜலீலா
Post a Comment