Wednesday, September 30, 2009

முளைப்பயிறு சுரைக்காய் கறி

தேவையானவை

முளைப்பயிறு - 2 கப்
(பாசிபயறும், தட்டைப்பயறும் கலந்து முளைக்கட்டியது)
சுரைக்காய் - 2 கப்
(சிறியதாக நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
கடுகு - சிறிது


செய்முறை
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நிறம் மாறியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பிறகு சுரைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இதில் முளைப்பயிறு சேர்த்து, மிளகாய்த்தூள், சாம்பார்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.
  • முளைப்பயிறு சீக்கிரம் வெந்து விடும். வேகவில்லை என்றால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  • தண்ணீர் சுண்டியதும் இறக்கவும்.

சத்தான, சுவையான கறி இது. சாதம் மற்றும் சப்பாத்தி இரண்டுக்கும் நன்றாக இருக்கும்.

பனீர் கபாப் (Paneer kabab)

தேவையானவை

பனீர் - 20 துண்டுகள்
குடமிளகாய் பச்சை - 20 துண்டுகள்
குடமிளகாய் சிவப்பு - 20 துண்டுகள்
காளான் - 20 துண்டுகள்
வெங்காயம் - 20 துண்டுகள்
(ஒரே மாதிரி சதுரமாக வெட்டி வைக்கவும்)


மசாலாவுக்கு

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
(நன்கு கலந்து வைக்கவும்)

செய்முறை
  • மசாலாவையும், வெட்டி வைத்த காய் மற்றும் பனீரையும் சேர்த்து நன்கு கலந்து 3 மணி நேரம் fridge ல் வைக்கவும்.
  • ஒவனை 375 க்கு முற்சூடு படுத்தவும்.
  • காய்களை ஒவ்வொன்றாக எடுத்து skewer ல்(தமிழ்ல என்னன்னு சொல்லுங்கப்பா) குத்தி வைக்கவும். 10 துண்டுகள் வரை ஒரு skewer ல் வைக்கலாம்.
  • ஒவனில் வைத்து 20 - 25 நிமிடங்கள் வரை விட்டு எடுக்கவும்.

எண்ணெயே சேர்க்காத ஹெல்த்தி, சுலபமான மற்றும் சுவையான கபாப் ரெடி.

Monday, September 14, 2009

காய்கறி குருமா ( Vegetable Korma)

தேவையானவை:

கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
பட்டாணி - 1/4 கப்
பச்சை கொண்டைக்கடலை - 1/4 கப்
காளிஃப்ளவர் - 1/4 கப்
(பொடியாக நறுக்கி வைக்கவும்)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2
இஞ்சி பூண்டு விழுது
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்


தாளிக்க:
கடுகு
கிராம்பு - 2
ஏலக்காய் -1
கடல்பாசி - சிறிது
மராட்டி மொக்கு - 2
பிரியாணி இலை - 2


அரைக்க:

தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 4
பாதாம் - 4
மல்லி விதை - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
கடல்பாசி - சிறிது


செய்முறை:
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
  • அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • அதில் நறுக்கி வைத்துள்ள காய்கள், தக்காளி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்மாசாலாத்தூள், உப்பு சேர்த்து, காய்கள் வேகும் வரை கொதிக்கவிடவும்.
  • பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • மல்லித்தளை தூவி வைக்கவும்.
சப்பாத்தி , பரோட்டா, பூரி , தோசை அனைத்திற்கும் நல்லா இருக்கும்.

Thursday, September 3, 2009

முளைப்பயிறு(பாசிப்பயறு) பிரியாணி

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 2 கப்
முளைப்பயிறு - 2 கப்
வெங்காயம் - 1(நறுக்கியது)
பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்திற்கு ஏற்ப)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
நெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க:
பிரியாணி இலை - சிறிது
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
மராட்டி மொக்கு - 3
கடல்பாசி - சிறிது
ரோஜா மொக்கு - சிறிது


செய்முறை:


  • குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் + 1 டீஸ்பூன் நெய் விட்டு தாளிக்கும் பொருட்களை சேர்க்கவும்.
  • அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்கவும்.
  • இதில் முளைப்பயிறு, பாஸ்மதி அரிசி சேர்த்து வதக்கி , உப்பும் சேர்த்து கலந்து 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விசில் போடவும்.
  • 1 விசில் வந்த்ததும், தீயைக்குறைத்து 5 நிமிடம் விட்டு இறக்கவும்.

தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம். புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. brown basmathi அரிசியும் உபயோகிக்கலாம்.

Tuesday, September 1, 2009

சோயா மசாலா

தேவையானவை:


சோயா உருண்டைகள் - 50
வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 ( பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

தாளிக்க:

பட்டை - 2 சிறிய துண்டுகள்
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
கடுகு
பிரியாணி இலை சிறிது
செய்முறை:
  • சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு பிழிந்து எடுக்கவும்.
  • குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து, அத்துடன் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு தக்காளி சேர்த்து உப்பு சிறிது சேர்த்து வதக்கவும்.
  • அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
  • மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து சோயா உருண்டை+ 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.

  • மல்லித்தளை சேர்க்கவும்.
சப்பாத்தி, பூரி, புலாவ் உடன் சாப்பிடலாம்.சோயா புரோடீன் சத்து நிறைந்தது. டயட்டில் இருப்பவர்களும் சேர்த்து கொள்ளலாம். செய்வதும் சுலபம்.
நேத்து dinner சப்பாத்தி, சோயா மசாலா.

Related Posts with Thumbnails