Wednesday, August 6, 2008

பட்டாணி புலாவ்

தேவையானவை

பாஸ்மதி அரிசி - 3 கப்
பட்டாணி - 1 கப்

அரைக்க
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 6
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 4 சிறிய துண்டு
ஏலக்காய் - 1


தாளிக்க
பிரியாணி இலை
கடல் பாசி
மராட்டி மொக்கு
சோம்பு
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
வெங்காயம் - 1 பெரியது ( நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
எண்ணெய்
நெய்


முந்திரி

செய்முறை


  • அரிசியை கழுவி ஊற வைக்கவும்.

  • ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு பிரியாணி இலை, கடல் பாசி, மராட்டி மொக்கு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து, பிறகு வெங்காயம் , பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  • அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

  • இவற்றுடன் பாஸ்மதி அரிசி, 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து rice cookerல் வைக்கவும்.

  • கடைசியாக முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
குருமாவுடன் சாப்பிடலாம்.
வேண்டுமானால் தேங்காய்ப்பால் 1 கப் சேர்க்கலாம்.

0 பேர் ருசி பாத்துட்டாங்க:

Related Posts with Thumbnails