Monday, September 14, 2009

காய்கறி குருமா ( Vegetable Korma)

தேவையானவை:

கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
பட்டாணி - 1/4 கப்
பச்சை கொண்டைக்கடலை - 1/4 கப்
காளிஃப்ளவர் - 1/4 கப்
(பொடியாக நறுக்கி வைக்கவும்)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2
இஞ்சி பூண்டு விழுது
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்


தாளிக்க:
கடுகு
கிராம்பு - 2
ஏலக்காய் -1
கடல்பாசி - சிறிது
மராட்டி மொக்கு - 2
பிரியாணி இலை - 2


அரைக்க:

தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 4
பாதாம் - 4
மல்லி விதை - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
கடல்பாசி - சிறிது


செய்முறை:
  • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
  • அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • அதில் நறுக்கி வைத்துள்ள காய்கள், தக்காளி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்மாசாலாத்தூள், உப்பு சேர்த்து, காய்கள் வேகும் வரை கொதிக்கவிடவும்.
  • பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • மல்லித்தளை தூவி வைக்கவும்.
சப்பாத்தி , பரோட்டா, பூரி , தோசை அனைத்திற்கும் நல்லா இருக்கும்.

5 பேர் ருசி பாத்துட்டாங்க:

Anonymous said...

healthy and yummyyyyyyyyyy

தெய்வசுகந்தி said...

நன்றி தூயா

ராஜ நடராஜன் said...

//கடல்பாசி - சிறிது
மராட்டி மொக்கு - 2//

செய்பொருட்கள் மற்றும் படம் பார்க்கும் போது குருமா ருசியாத்தான் இருக்கும் போல தெரிகிறது.ஆனா அதென்ன அடைப்பானுக்குள்ள இருக்கிறது?

உங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமா?கசகசா ன்னா இந்த (Poppy seed ங்கிற தமிழ்தானே?) இதைக் கண்ணுல பார்த்து வருசக் கணக்காகுது(சின்னதா இருக்கறதால அல்ல:))அது போதையோ என்னமோ செய்ய பயன்படும்கிறதால வளைகுடாவில் தடை.இங்க வரும் கரம் மசாலாவெல்லாம் அது தவிர்த்தே வருகிறது.

அடைப்பானுக்கு அர்த்தம் சொல்லுங்க.நான் திரும்ப வாரேன்.

தெய்வசுகந்தி said...

கடல் பாசியும் மராட்டி மொக்குமா கேக்கறீங்க?

பிரியாணி பண்ண உபயோகிப்போம்.
கடல்பாசி படத்துல மிளகாய்க்கும், மல்லி விதைக்கும் நடுவுல இருக்கறது.
மராட்டி மொக்கு படம் , முளைபயறு பிரியாணியில(http://suganthiskitchen.blogspot.com/2009/09/blog-post_03.html) தாளிக்க ஒரு படம் இருக்குது பாருங்க, அதுல இருக்குது.

அடடா கசகசாவுக்கு இப்படி ஒரு சிக்க்லா? :(

Jaleela Kamal said...

கடல் பாசி போட்டு தாளிப்பீங்கலா?

அந்த போட்டோ சரியா தெரியலையே,

கருப்பா வேர இருக்க்கிற மாதிரி இருக்கு.

Related Posts with Thumbnails