தேவையானவை
எண்ணெய்
ஸ்பிரிங் ரோல் பேஸ்ட்ரி(Sheets)
மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
முளைப்பயிறு(பாசிப்பயறு) - 1/4 கப் (நறுக்கியது)
கோஸ், 1/4 கப் (நறுக்கியது)
கேப்சிகம்(பச்சை & சிவப்பு) - 1/4 கப்(நறுக்கியது)
பூண்டு - 1 பல் (பொடியாக நறுக்கியது)
சில்லி சோய் சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
செய்முறை
- கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பிறகு வெங்காயம், முளைப்பயிறு மற்றும் காய்கள் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
- கடைசியாக சில்லி சோய் சாஸ், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.
- மைதா மாவை தண்ணீரில் பேஸ்ட் மாதிரி கலந்து வைக்கவும்.
- காய்கறிகலவை நன்கு ஆற விடவும்.
- பிறகு பேஸ்ட்ரி ஷீடில் ஒரு டேபிள் ஸ்பூன் காய் கலவையை வைத்து ஸ்பிரிங் ரோல் மாதிரி சுற்றி அதன் முனையை மைதா பேஸ்டில் ஒட்டவும்.
- காய்கறி கலவை முடியும் வரை செய்யவும். 10 அல்லது 12 ஸ்பிரிங் ரோல் செய்யலாம்.
- பிறகு கடாயில் எண்ணெய் வைத்து ஒவ்வொன்றாக பொறித்து எடுக்கவும்.
4 பேர் ருசி பாத்துட்டாங்க:
சத்தாண உணவு :)
நன்றி தூயா
wt s pestry sheet?? wr can v get?? is it any dough?
இங்க எல்லா கடையிலயும் ஸ்ப்ரிங்ரோல் ஷீட் கிடைக்கும். Chinese store ல ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பா கிடைக்கும்.
Post a Comment