Monday, August 18, 2008

தக்காளிச்சட்னி

தேவையானவை

தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
உப்பு
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை



வறுக்க
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/4 டேபிள் ஸ்பூன்
மிளகு - 4
வரமிளகாய் - 3





செய்முறை
  • வறுக்க வேண்டியதை சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும்

  • மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கவும்.

  • இவை அனைத்தையும் சேர்த்து உப்பும் சேர்த்து அரைக்கவும்.

  • பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.






இட்லி, தோசை, பணியாரம் அனைத்திற்கும் நல்ல combination இந்த சட்னி.

6 பேர் ருசி பாத்துட்டாங்க:

மங்களூர் சிவா said...

சூப்பர். மிக்க நன்றி. ரொம்ப எளிதாக இருக்கிறது. நாளைக்கே முயற்சித்து பார்க்கிறேன்.

தெய்வசுகந்தி said...

வருகைக்கு நன்றிங்க சிவா. இப்பத்தான் உங்க போஸ்ட்
( குடும்பத்துடன் பார்க்கும்படியான சினிமா ) படிச்சுட்டு வந்தேன்.

Anonymous said...

முயற்சிக்கின்றே...:)

ஆயில்யன் said...

ரொம்ப ஈசியா இருக்கு! ஒ.கே நாளைக்கு லேப்ல உக்காந்திடவேண்டியதுதான்! :)))

தெய்வசுகந்தி said...

kitchen, லேப் மாதிரின்னா ...
பரிசோதனை எலி யாரு? நீங்களேவா ???

ஆயில்யன் said...

// தெய்வசுகந்தி said...
kitchen, லேப் மாதிரின்னா ...
பரிசோதனை எலி யாரு? நீங்களேவா ???
//


ம்ம் நானேதான் இதுவரைக்கும் ஒண்ணும் ஆகலை நல்லா தேக்கு மாதிரி இருக்கோம்ல எதை தின்னாலும் ஏத்துக்குது :))))

Related Posts with Thumbnails