தேவையானவை:
கோதுமை மாவு அல்லது multi grain மாவு - 2 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1/2
குடமிளகாய் - 1/2
கீரை - 1 கைப்பிடி
முட்டைகோஸ் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
மல்லித்தளை - சிறிது
(அனைத்தையும் பொடியாக நறுக்கவும்)
செய்முறை:
- ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், காய்களை வதக்கி வைக்கவும்.
- மாவுடன் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து, வதக்கி வைத்தவற்றையும் சேர்த்து , சிறிது சிறிதாக சுடு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
- சப்பாத்தி மாவை விட நன்கு தளர பிசைய வேண்டும்.
- சப்பாத்தி கல்லை காய வைத்து, ஒரு உருண்டை மாவை எடுத்து கல்லில் வைத்து கையால் அழுத்தி ரொட்டி போல் செய்ய வேண்டும்.
- இடை இடையே தண்ணீர் தொட்டு செய்தால் கையை சுடாமல் செய்யலாம்.
- அல்லது ஒரு sheet ல் மாவை வைத்து ரொட்டியாக தட்டி எடுத்து சப்பாத்தி போல் சுட்டு எடுக்கலாம்.
இதில் கேரட்டும் துருவி சேர்க்கலாம்.
நான் sujatha brand multi grain flour உபயோகித்தேன். கோதுமை அல்லது ராகி மாவிலும் செய்யலாம்.
23 பேர் ருசி பாத்துட்டாங்க:
சூப்பராயிருக்கு.
சுப்பராக இருக்கும் என நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்
Superb healthy roti...
சத்தான உணவு.
அருமைங்க.. மல்லித்தழை நிறையபோட்டு செஞ்சா வாசனையாவும் இருக்கும்.. ஆரோக்கியத்துக்கும் நல்லது.
சத்தான ரொட்டி ரொம்ப நல்லா இருக்கு
அருமை.ரொம்ப நாளாக பார்க்க முடியலை,ஊர் போயிருந்தீர்களா?
நன்றிங்க புவனேஸ்வரி!!!!
நன்றிங்க சரவணன்!! ஆமாங்க!
நன்றி மேனகா!!
நன்றி கீதா!!!
நன்றி சித்ரா!!!!
நன்றி அமைதிச்சாரல்!! ஆமாங்க மல்லித்தளை நிறைய போட்டா நல்லா இருக்கும்.
நன்றி சினேகிதி!!
நன்றி ஆசியா!! ஊருக்கெல்லாம் போகலைங்க! கொஞ்ச நாளா ஒழுங்கா சமைக்கறதில்லைங்க!!
சூப்பரான ரொட்டி. அவசியம் அடுத்த தடவை இங்கு வந்து ரெசிப்பி எடுத்து செய்துபார்த்து பின்னுடம் தருகிறேன்.
www.vijisvegkitchen.blogspot.com
இந்த மல்ட்டிக்ரெய்ன் மாவை பாத்தேன்,ஆனா வாங்கலை. ரொட்டி சூப்பரா இருக்கு சுகந்திக்கா!
நன்றி விஜி! செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க!!
நன்றி மகி! இந்த மாவுல சப்பாத்தி, பூரி எல்லாமே நல்லா இருக்குது. ட்ரை பண்ணி பாரு!
super rotti!
Hy dear,
Am gonna try this healthy recipe...awesome..nice presentation...
நல்லா இருக்குதுங்க.
நன்றி வானதி!!!
நன்றி ஜெய்!!!
நன்றி சுசி!!!
umm Nice..
இருங்க இருங்க சொல்றேன்... உங்க வலைப்பூவுல அடிக்கிற சமையல் மணம் மூக்கைத் துளைக்குதுங்க..அதைதான் இப்போ வாசனைப் புடிச்சிக்கிட்டிருந்தேன். வாசனையே இப்பிடி இருந்தா,உங்க சமையல் எப்படி இருக்கும். உங்க வலைப்பூவை அவசியம் எங்க ஜனங்களுக்கு சிபாரிசு செய்வேங்க!
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அஹமது இர்ஷாத்!!
முதல் வருகைக்கும், கருத்துக்கும், சிபாரிசு செய்யறதுக்கும் நன்றிங்க மோகன்ஜி!! அப்படியே ஆஸ்டின் வாங்க சாப்பிட்டும் பார்க்கலாம்.!
எங்க வீட்டுல இது அடிக்கடி செய்வோம்... நல்ல healthy கூட... உங்க செய்முறை இன்னும் நல்லா இருக்கு... நன்றி
நன்றிங்க தங்கமணி!!
healthy and yummy
ஹெல்தி ரொட்டி, என்ன டயட்டா>
டயட்டெல்லாம் இல்லீங்க ஜலீலா!
Post a Comment