Tuesday, September 21, 2010

கடலை உருண்டை


தேவையானவை:

நிலக்கடலை - 2 கப்
வெல்லம் - 3/4 கப் (துருவியது)
நெய் - சிறிது

செய்முறை
  • நிலக்கடலையை நன்றாக வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
  • அதில் தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு 4 அல்லது 5 முறை pulse பண்ணவும்.(நான் முழுசா தோல் நீக்க மாட்டேன், பாதி தோல் இருக்கற மாதிரி செய்வேன்)
  • ஒரளவு பறு பறுப்பாக இருக்க வேண்டும்.
  • அத்துடன் வெல்லத்துருவலை சேர்த்து மறுபடியும் ஒரு முறை பல்ஸ் பண்ணி எடுக்கவும்.
  • இதை சிறிது நெய் சேர்த்து உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.

சத்தான கடலை உருண்டை ரெடி. என் கணவருக்கும், பொண்ணுக்கும் ரொம்ப பிடித்தது இது.

அதிகமாக நெய் சேர்க்கவேண்டியதில்லை. உருண்டை பிடிக்கும் போது கைகளில் தடவிக்கொண்டால் போதும்.

இனிப்பு தேவைக்கு ஏற்ப வெல்ல அளவை சரி செய்து கொள்ளலாம்.

கடலை வறுக்க(நிஜமாவே நிலக்கடலைதாங்க, வேற எதுவும் இல்ல) சுலபமான முறை அவனில் வைத்து எடுக்கலாம்

300F ல் 10 - 15 நிமிடங்கள் வைத்திருந்தால் போதும்.

சீக்கிரமா செய்ய வேண்டுமானால் microwave லும் செய்யலாம். microwave ல் 2 நிமிடம் வைத்து 3 நிமிடம் standing time கொடுத்து எடுத்தாலும் நன்றாக இருக்கும்.

24 பேர் ருசி பாத்துட்டாங்க:

Mrs.Menagasathia said...

superr!!!

தெய்வசுகந்தி said...

Thanks menaka super fast response!!

LK said...

அருமை ... எனக்குப் பிடிச்சது

புவனேஸ்வரி ராமநாதன் said...

எனக்கு பிடித்தமானது. மிகவும் அருமை.

vanathy said...

looking very delicious, Suganthy. Very healthy too.

Chitra said...

Very nice. :-)

தங்ஸ் said...

உங்க பதிவு பக்கம் வந்தாலே நம்மூருக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்குங்க.. கொள்ளுத்தண்ணி ரசம், கொள்ளுப்பொடிக்கு நான் அடிமை:-)

தேங்காபுளிச்சாறு எப்ப வைப்பீங்க?

நாங்களும் பொள்ளாச்சி தான்...சூலக்கல் பக்கம்.

Krishnaveni said...

looks very easy and yummy

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

பார்க்கவே அருமையா இருக்குங்க தெய்வ சுகந்தி, இன்னைக்கு கண்டிப்பா செய்யறேன், ஈசியாத்தானே இருக்கு.....

asiya omar said...

வாசனையும் அதுவும் சூப்பர்.

மோகன்ஜி said...

கடலை உருண்டைன்னா காதையே
அறுத்தில்ல குடுத்துடுவேன்?!
படிச்சதே கடலை உருண்டையை கடிச்சது போல் இருக்கு மேடம்!

Mahi said...

கடலையை முழுசா போட்டு கடலை உருண்டை-பர்ஃபி செய்வதைத்தான் சாப்பிட்டிருக்கேன்.இது புதுசா இருக்கு,ஈஸீயாவும் இருக்கு சுகந்திக்கா.

கடலை வறுக்கிற டிப்ஸும் அருமை.(நான் சொன்னதும்,வேர்க்கடலைதான்,வேற கடலை இல்லைங்கோ.ஹிஹி)

ஜெய்லானி said...

//நிலக்கடலையை நன்றாக வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.//

அந்த அளவுக்கு பொறுமை இல்லீங்க .மேல உள்ள தட்டை அப்படியே குடுங்க பாக்கும் போதே வயிறு சும்மா கப..கபன்னு எடுக்க சொல்லுது..!!! :-))

அன்னு said...

தெய்வசுகந்தி, உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

ஸ்வர்ணரேக்கா said...

நல்லாயிருக்குங்க உங்க ரெசிபி...

ரோகிணிசிவா said...

உங்க சமையல் குறிப்புகளுக்கு ரொம்ப நன்றிங்க ,,
உங்களுக்கு பொள்ளாச்சியா ,
எனக்கும் அது தான் ஊரு கோட்டாம்பட்டி நம்ப ஏரியா

அப்பாவி தங்கமணி said...

ஈஸி அண்ட் ஹெல்தி ரெசிபி... சூப்பர்ங்க... எனக்கும் இது ரெம்ப பிடிக்கும்.. இவ்ளோ சுலபம்னு தெரியல... செஞ்சு பாக்குறேன்... நன்றி

தெய்வசுகந்தி said...

நன்றி கார்த்திக்!!

நன்றி புவனேஷ்வரி!!

நன்றி வானதி!!

நன்றி சித்ரா!!

தெய்வசுகந்தி said...

நன்றி தங்ஸ் ! எங்க அம்மா ஊர் சூலக்கல் பக்கம்தான்!! தேங்காய்ப்புளிச்சாறு சீக்கிரமே போடறனுங்க!!!

நன்றி கிருஷ்ணவேனி !!!!

நன்றி நித்திலம்!!!!

நன்றி ஆசியா!!!
நன்றி மோஹன்ஜி !!!

தெய்வசுகந்தி said...

நன்றி மகி!!!

நன்றி ஜெய்லானி!! உங்களுக்குதான் எடுத்துக்குங்க!!

நன்றி அன்னு!!!! அடுத்த வாரத்தில எழுதிடறேன்!!!!

நன்றி ஸ்வர்ணரேக்கா!!!!

தெய்வசுகந்தி said...

நன்றி ரோஹிணி !!!எங்க ஊர் முத்தூர் பாலக்காடு ரோட்ல இருக்குது!!!

நன்றி அப்பாவி தங்கமணி!!

Jaleela Kamal said...

எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது, மீன் சாப்பிட்டா வேர்கடல் உருண்டை அல்லது பர்பி ஏதாவது சாப்பிட்டே ஆகனும்,எனக்கு, அப்பாவுக்கும் ரொம்ப பிடிக்கும்.

சூப்பர் கடல உருண்டை

தெய்வசுகந்தி said...

நன்றிங்க ஜலீலா!!

Mahi said...

சுகந்திக்கா,உங்களுடன் ஒரு விருதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_07.html

Related Posts with Thumbnails