Wednesday, September 30, 2009

பனீர் கபாப் (Paneer kabab)

தேவையானவை

பனீர் - 20 துண்டுகள்
குடமிளகாய் பச்சை - 20 துண்டுகள்
குடமிளகாய் சிவப்பு - 20 துண்டுகள்
காளான் - 20 துண்டுகள்
வெங்காயம் - 20 துண்டுகள்
(ஒரே மாதிரி சதுரமாக வெட்டி வைக்கவும்)


மசாலாவுக்கு

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
(நன்கு கலந்து வைக்கவும்)

செய்முறை
  • மசாலாவையும், வெட்டி வைத்த காய் மற்றும் பனீரையும் சேர்த்து நன்கு கலந்து 3 மணி நேரம் fridge ல் வைக்கவும்.
  • ஒவனை 375 க்கு முற்சூடு படுத்தவும்.
  • காய்களை ஒவ்வொன்றாக எடுத்து skewer ல்(தமிழ்ல என்னன்னு சொல்லுங்கப்பா) குத்தி வைக்கவும். 10 துண்டுகள் வரை ஒரு skewer ல் வைக்கலாம்.
  • ஒவனில் வைத்து 20 - 25 நிமிடங்கள் வரை விட்டு எடுக்கவும்.

எண்ணெயே சேர்க்காத ஹெல்த்தி, சுலபமான மற்றும் சுவையான கபாப் ரெடி.

8 பேர் ருசி பாத்துட்டாங்க:

Menaga Sathia said...

super&healthy dish suganthi!!

ராஜ நடராஜன் said...

குருமா மிச்சம் மீதி ஏதாவது இருக்கான்னு திரும்ப வந்தா பனீர் கபாப் தயார் போர்டு.

தெய்வசுகந்தி said...

நன்றி மேனகா, ராஜ நடராஜன்!

ராஜ நடராஜன் said...

நீங்க சொன்ன மராட்டி மொக்கு,கடல்பாசி இரண்டும் நான் கண்ணுல பார்த்ததேயில்ல இதுவரைக்கும்.அம்மணி நம்ம ஊர் புளிக்கு பதிலா ஒண்ணு புளிப்பா என்னமோ சேர்க்கிறாங்க.ஒரு வேளை அதுவா இருக்குமோ?ஆனா நீங்க தந்த கடல் பாசி பட இணைப்பு அவுட் ஆஃப் ஃபோகஸ்.

வெஜிடபிள் குருமா,சப்பாத்தி கல்லூரி விடுதி ருசி நினைவுக்கு வருது.

Shanthi said...

It looks yummy! If chicken is added in the middle it will be even more delicious!

Shanthi said...

It looks yummy! If chicken is added in the middle it will be even more delicious!

தெய்வசுகந்தி said...

shanthi, i know you would tell this. 2 more weeks of purattaasi. then you can try this with chicken.

Jaleela Kamal said...

சுகந்தி கபாப் சூப்பர்,

Related Posts with Thumbnails