தேவையானவை
பாஸ்மதி அரிசி - 3 கப்
செய்முறை
மல்லி, புதினா கடைசியில் சேர்ப்பதால் நல்ல மணம் இருக்கும்.
பாஸ்மதி அரிசி - 3 கப்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு
இஞ்சி, பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன்
தக்காளி paste - 2 டேபிள்ஸ்பூன்
(தக்காளியும் உபயோகிக்கலாம், pasteல் கலர் நல்லா இருக்கும் )
வெங்காயம் - 2 நீளமாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
மல்லி இலை
புதினா இலை
சோயா உருண்டைகள் - 30 ( சுடு நீரில் போட்டு பிழிந்து எடுக்கவும்)
பொடிக்க
பட்டை - 5 (1 இன்ச் அளவு)
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
(மிக்ஸியில் போட்டு பொடி பண்ணவும்)
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்(optional )
கடுகு
பிரியாணி இலை
கடல் பாசி
மராட்டி மொக்கு
செய்முறை
நான் பாத்திரத்தில் செய்து ovenல் வைப்பேன். வேண்டுமானால் குக்கரில் வைக்கலாம்.
குக்கரில் வைப்பதாக இருந்தால் அதிலேயே தாளித்து விடலாம். ovenல் வைப்பதாக இருந்தால் oven safe பாத்திரத்தில் தாளித்து விடலாம்.
- அரிசியை ஊற வைக்கவும். ovenஐ 350F ல் செட் செய்யவும்.
- பாத்திரத்தில் எண்ணெய்+நெய் விட்டு கடுகு,பிரியாணி இலை, கடல் பாசி, மராட்டி மொக்கு, பொடி, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
- பிறகு சோயா உருண்டைகள், தக்காளி பேஸ்ட், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- அதில் 5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- ஒரள்வு அரிசி வெந்தவுடன், மல்லி இலை, புதினா இலை சேர்த்து கிளறி, பாத்திரத்தை எடுத்து ovenல் வைத்து 20-30 நிமிடங்கள் கழித்து வெளியே எடுக்கவும்.
இதில் சோயா உருண்டைகள் சேர்க்காமலும் செய்யலாம். என் பையனுக்கும், பொண்ணுக்கும் சோயா உருண்டைகள் பிடிக்கும். அதனால் எல்லா மசாலா சமையலிலும் சேர்த்து விடுவேன்.
மல்லி, புதினா கடைசியில் சேர்ப்பதால் நல்ல மணம் இருக்கும்.
5 பேர் ருசி பாத்துட்டாங்க:
ஆஹா எனக்கு வாய் ஊறுதே :):):)
இந்த வாரம் ஊருக்கு போகயில எங்க தங்கமணிட்ட மறக்காம இதை படிக்கச் சொல்றேன்
rapp பார்சல் அனுப்பி விடவா :)
நன்றிங்க அப்துல்லா
Hi, maraatti mokku-na enna?
தாளிக்க கொடுத்துள்ள படத்தில் கடுகுக்கு பக்கத்தில் கருப்பா நீளமா இருக்கறதுதான். பிரியாணி தாளிக்கற பொருட்கள்ள இதுவும் ஒன்னு.
Post a Comment