தேவையானவை
பாசிப்பயறு(முழுப்பயறு) - 1 கப்
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 10 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
பூண்டு - 2 பல் நறுக்கியது
கொத்தமல்லி - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய்
செய்முறை
- பாசிப்பயறை நன்றாக வேகவைக்கவும் (குக்கரை விட சட்டியில் வைத்து வேகவைத்தால் நல்லா இருக்கும்)
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கொத்தமல்லி, சீரகம் தாளித்து வெங்காயம், பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வேகவைத்த பயறையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- பிறகு பருப்பு கடையும் மத்தில் கடையவும்.
- கடைசியில் மல்லி இலை சேர்க்கவும்.
இதுவும் கொங்கு நாடு ஸ்பெசல்.
சாதத்துடன் சாப்பிடலாம்.
1 பேர் ருசி பாத்துட்டாங்க:
இது நல்லா இருக்குங்க. கொஞ்சம் காரத்துக்கு நாங்க மிளகு சேர்த்து அரைப்பது உண்டு. இது கூட புளிக்குழம்பு காம்பினேசன் இருந்தா போதும். நல்லா இருக்கும்.(எனது புளிக்குழம்பு,பருப்புத்தொகையல் ) இதோ பார்முலா யூஸ் பண்ணி நான் கொள்ளு மசியல் மற்றும் கொள்ளு இரசம் பண்ணியிருக்கன். படிக்கவும். நன்றி.
Post a Comment