தேவையானவை:
கத்திரிக்காய் - 15 ( சிறியது)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை - 1/4 கப் ( வறுத்து பொடித்தது)
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மாசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு
செய்முறை
- ஒவனை 300 டிகிரி சூடு படுத்தவும்.
- கத்திரிக்காயை ஸ்டஃப் பண்ண வசதியாக நறுக்கவும் . (காம்பு பகுதியை விட்டு மத்த பகுதியை பாதி வரை நறுக்கவும்)
- பொடிகளை ஒன்றாக கலந்து முடிந்தவரை கத்திரிக்காயில் திணிக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணய் விட்டு கத்திரிக்காய் சேர்த்து உடைந்து விடாமல் மெதுவாக திருப்பவும்.(காயின் எல்லா பக்கமும் எண்ணெய் படுமாறு திருப்ப வேண்டும்)
- பிறகு ஒவனில் வைத்து விடவும்.
- 20-30 நிமிடங்களில் கத்திரிக்காய் வெந்து விடும்.
ஒவனில் வைக்கும் போது அலுமினியம் ஃபாயிலில் மூடி வைத்தால் வறண்டு விடாமல் இருக்கும்.
இந்த முறையில் செய்தால் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.
நிலக்கடலையை நன்றாக பொடிக்க கூடாது.
7 பேர் ருசி பாத்துட்டாங்க:
அசத்தல் செய்முறை..
நன்றிங்க தூயா.
/
ஒவனை 300 டிகிரி சூடு படுத்தவும்.
/
அவ்வ்வ்வ்வ்
எங்க போறது ஓவனுக்கு!?!?
ஒவன் இல்லாட்டி கடாய்லயே வேக விடலாம். கொஞ்சம் எண்ணெய் அதிகம் விடனும் அவ்வளவுதான்
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.
ஏம்மா, 300 டிகிரி பாரன்ஹீட்டா இல்லே செண்டிகிரேடா? செண்டிகிரேடா இருந்தா கத்தரிக்காய் கருகல்தான் மிஞ்சும்!
பாரன்ஹீட் தாங்க
Post a Comment