தேவையானவை
கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
செய்முறை
- கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும்
- வேக வைத்த கொள்ளு, வரமிளகாய், மல்லி, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.
இது கொங்கு நாடு ஸ்பெசல் கொள்ளு குழம்பு.
3 பேர் ருசி பாத்துட்டாங்க:
//இது கொங்கு நாடு ஸ்பெசல் கொள்ளு குழம்பு.//
That is called kollu paruppu.
ஆமாங்க. எங்க ஊர்ல (பொள்ளாச்சி) கொள்ளு பருப்புன்னுதான் சொல்லுவாங்க. ஆனா என் husband குழம்புன்னு சொல்லுவாங்க.
I am from Erode. We also eat this kollu paruppu atleast once a week. I love this. My Amma don't add garlic. But I am going to try now with garlic. Thanks for sharing.
Radha
Post a Comment