வேக வைக்க
துவரம் பருப்பு - 1 கப்
வறுத்து அரைக்க
வர மிளகாய் - 8
மல்லி - 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 1 மேசைக்கரண்டி(optional)
நன்கு வறுத்து சிறிது நீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.
மற்றவை :
காய் : முருங்கை, வெள்ளைப்பூசணி, கேரட் (அல்லது விருப்பம்போல்)
ஒரே அளவாக நறுக்கி வைக்கவும்.
பெரிய வெங்காயம் - 1 அல்லது சிறிய வெங்காயம் - 15
தக்காளி - 1 நறுக்கி வைக்கவும்
புளிக்கரைசல் , வெல்லம்
தாளிக்க :
கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, நெய் (optional)
- கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- காய் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் , உப்பு மற்றும் அரைத்த மசாலாவில் பாதி சேர்த்து வேக விடவும்.
- காய் நன்கு வெந்ததும், வேக வைத்த பருப்பு, புளிக்கரைசல், மீதி உள்ள மசாலா சேர்த்து கொதிக்க விடவும்.
- பிறகு சிறிது வெல்லம் சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.
- தாளிக்கும் கரண்டியில் நெய் சேர்த்து கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து சாம்பார் உடன் சேர்க்கவும்.
கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
இட்லி, தோசை மற்றும் பொங்கல் உடன் சேர்த்து சாப்பிடலாம்
4 பேர் ருசி பாத்துட்டாங்க:
நிச்சயம் முயற்சித்து பார்க்க போகின்றேன்..
முயற்சி செஞ்சு பார்த்துட்டு நல்லா இருந்ததான்னு சொல்லுங்க தூயா
தெய்வசுகந்தி,
நன்றிங்க.
இன்று செய்தாகிவிட்டது. பிடித்திருந்தது :)))
நன்றிங்க newbee.
Post a Comment