இது என் ஆந்திரா தோழி ஒருவருடைய ரெசிபி!.
தேவையானவை
மாங்காய் (பெரியது)- 2
உப்பு - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 1/2 கப்
கடுகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 10 பல்
நல்லெண்ணெய் - 3கப்.
செய்முறை
- மாங்காயை துண்டுகளாக நறுக்கவும். (மாங்காய் கொட்டையின் மேல் உள்ள கடினமான பகுதியும் சேர்ந்து வருமாறு நறுக்கவும்)
- இஞ்சி மற்றும் பூண்டை அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.(நான் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து அரைத்தேன்)
- எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
- கடாயி எண்ணெயை சூடாக்கி , பிறகு ஆற வைத்து சேர்க்கவும்.
- ஒரு வாரம் ஊறிய பிறகு உபயோகிக்கலாம்.
இஞ்சி பூண்டு சேர்ப்பதால் நல்ல வாசனையாக இருக்கும்.
