Saturday, March 7, 2009

குடமிளகாய் சாதம் (Bell Pepper Rice) (Capsicum Rice)

தேவையானவை

சாதம் - 4 கப்
குடமிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
வெங்காயம் - 11/2 (நீளவாக்கில் நறுக்கியது)
கறிவேப்பிலை
உப்பு

தாளிக்க

கடுகு
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு
எண்ணெய்

வறுத்து பொடிக்க

வர மிளகாய் - 5
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மல்லி விதை - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1/4 டீஸ்பூன்
நிலக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 2
மிளகு - 11/2 டீஸ்பூன்
தேங்காய் துறுவல் - 1/2 டேபிள்ஸ்பூன்

வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்..

செய்முறை


  • சாதத்தை உதிரியாக வேகவைத்து வைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, தாளித்து , வெங்காயம், குடமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  • பிறகு அத்துடன் சாதம், உப்பு, மற்றும் பொடித்ததை சேர்த்து நன்கு கலக்கவும்.
அப்பளத்துடன் சாப்பிட நல்லா இருக்கும்.

முட்டை ஃப்ரை (Egg Fry)

தேவையானவை


முட்டை - 4
சக்திமசாலா fish fry masala - 1 டேபிள்ஸ்பூன்
சோள மாவு(corn flour) - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு


எண்ணெய்
bread crumbs

செய்முறை

  • முட்டையை வேகவைத்து உறித்து, இரண்டாக வெட்டி வைக்கவும்.
  • அதன் வெள்ளைப்பகுதியில் லேசாக கீறல் போடவும்.
  • சக்திமசாலா, சோள மாவு, தயிர், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து, முட்டையில் தடவி 15 நிமிடம் வைக்கவும்.
  • ஒரு non-stick தவாவில் சிறிது எண்ணெய் விட்டு காய விடவும்.
  • முட்டையை bread crumbs ல் பிரட்டி தவாவில் போட்டு 2 நிமிடம் விடவும்.
  • பிறகு அதை திருப்பி போட்டு 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.

இதை party starter ஆகவோ, தயிர் சாதத்துடனோ அல்லது அப்படியேவோ சப்பிடலாம்.

Wednesday, March 4, 2009

முட்டை கறி (Egg Curry)

எப்பவும் சக்தி மசாலா உபயோகிச்சு முட்டை கறி செய்யறது அலுத்துப் போனதால இது புது முயற்சி.



தேவையானவை

முட்டை - 6
வெங்காயம் - 1 (பொடியாக்க நறுக்கியது)
பச்சை மிளகாய் -2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு


அரைக்க

தேங்காய் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை

  • முட்டையை வேகவைத்து ஓடு உறித்து வைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  • நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  • பின்பு அரைத்த விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  • முட்டையை பாதியாக வெட்டி, அதில் 3 முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து பொடித்து, கொதித்த கலவையில் சேர்த்து கலக்கவும்.

  • மற்ற முட்டைகளையும் சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும்.


சாதம், சப்பாத்தி இரண்டுக்கும் நல்ல combination.

Sunday, March 1, 2009

Easy காய்கறி சூப்

தேவையானவை

வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 3 பல்
காய் விருப்பம் போல - 1/2 கப்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி அல்லது ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்




பொடிக்க
மல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்








செய்முறை

  • குக்கரில் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அத்துடன் காய், அரிசி, பருப்பு, அரைத்த பொடி சேர்த்து கலந்து தண்ணீர் 3 கப் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்

  • 3 விசில் வந்ததும் இறக்கி பறிமாறவும்.

காய் விருப்பமானவற்றை சேர்க்கலாம். நான் இதில் கேரட், முருங்கைகாய், சோளமுத்துக்கள், பீன்ஸ், உருளைக்கிழங்கு, லீமா பீன்ஸ், ஸுக்கினி மற்றும் கீரை சேர்த்துள்ளேன்.

காரம் வேண்டுமானால் 1 பச்சை மிளகாய் சேர்க்கலாம

Tuesday, February 24, 2009

காளான்(mushroom) குருமா

தேவையானவை


காளான் -1/2 kg or 1 lb(நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2 ( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மல்லி இலை



வதக்கி அரைக்க
வெங்காயம் - 1/2
தக்காளி - 1/2
பூண்டு- 2 பல்
இஞ்சி - 1 துண்டு
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
பாதாம் - 5

செய்மூறை
  • எண்ணெய் விட்டு வெங்காயம் 1/2 , பூண்டு, இஞ்சியை நன்கு வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சிறிது நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • இதை ஆற விட்டு முந்திரி, பாதாம் சேர்த்து அரைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து மீதமுள்ள வெங்காயம் , மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பின்பு அரைத்த விழுதுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதித்தவுடன் காளான் மற்றும் கரம் மசாலா சேர்த்து மறுபடியும் 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
  • மல்லி இலை தூவி இறக்கவும்.

சப்பாத்தி, பராட்டா, சாதம் அனைத்துக்கும் நல்ல combination.

Related Posts with Thumbnails