Wednesday, October 13, 2010

கோதுமை அல்வாதேவையானவை

கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய்ப்பொடி - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
வென்னிலா எஸன்ஸ் - 2 துளிகள்
நெய் - 1 கப்
கனோலா எண்ணெய் - 1 கப்
முந்திரி - 15
உலர்ந்த திராட்சை - 15

செய்முறை
  • மேலே கொடுத்துள்ள பொருட்களில் நெய், எண்ணெய் தவிர அனைத்தையும் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
  • நான் ஸ்டிக் கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.
  • அதே கடாயில் கரைத்து வைத்த மாவை சேர்த்து நன்கு கிளறவும்.
    எண்ணெய் மற்றும் நெய் மாற்றி மாற்றி சேர்த்து கிளறவும்.
  • எண்ணெய் கக்க ஆரம்பிக்கும்போது வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.


எப்பவும் கோதுமைப்பால் எடுத்து செய்ய, முதல் நாள்லருந்து வேலை செய்யனும். இது 1 1/2 மணி நேரத்துல செஞ்சறலாம். சுலபமான வேலை, சுவையாகவும் இருந்தது.


மைதா மாவிலயும் இதே போல செய்யலாம்.
மேலே இருக்கற படங்கள்ள 1 மைதா அல்வா 1 கோதுமை அல்வா எதுன்னு கரெக்டா சொல்றவங்களுக்கு அல்வா பார்சல்.

20 பேர் ருசி பாத்துட்டாங்க:

Mrs.Menagasathia said...

வாவ்வ் ரொம்ப சூப்பரா இருக்கு..முந்திரி டெகரேஷன் அதாவது முதல் படம் மைதா அல்வா,2 வது கீழே இருப்பது கோதுமை அல்வா...கரெக்ட்டாங்க....

மகி said...

/மேலே இருக்கற படங்கள்ள 1 மைதா அல்வா 1 கோதுமை அல்வா எதுன்னு கரெக்டா சொல்றவங்களுக்கு அல்வா பார்சல்./ இந்த விளையாட்டுக்கு நான் வரலீங்கோ.எப்பவுமே தப்பா கெஸ் பண்ணறதுதான் என் வழக்கம். :)

இருந்தாலும் ட்ரை பண்ணறேன்..கோதுமை அல்வான்னு பேரு வச்சு,மைதா அல்வா போட்டோவ போட்டிருக்க மாட்டீங்கள்ல? ஸோ, முதல் படம் கோதுமை,2வது மைதா. கரெக்ட்டா? தப்புன்னா....மாத்திப் படிச்சிக்கிடுங்க எல்லாரும். ஹிஹி!

சுகந்திக்கா,அல்வா-வை அரைமணி நேரம் கிண்டணுமா? எனக்கு நினைக்கவே கை வலிக்குதே!!நீங்க 2 முறை செய்துட்டீங்க!கலக்கல்!:)

Premalatha Aravindhan said...

Halwa Really tempting,never tried in gothumai.Have to try...

DrPKandaswamyPhD said...

அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு.

(மேலே தெரிகின்ற முந்திரியை இன்னும் கொஞ்சம் வறுத்திருக்கலாமோ? இல்லே போடோவுக்கு போஸ் கொடுக்கப் போட்டீங்களா?)

வருத்தப்படாதீங்க, வாத்தியார் எப்பவும் கொறைதான் சொல்லுவார்.

Chitra said...

எனக்கு கோதுமை அல்வா - ஒரு plate - மைதா அல்வா - ஒரு plate பார்சல்ல்ல்ல்ல் !!!!

Anonymous said...

nalla irukkunga.. kalayile alwava??

அன்னு said...

பதில் சொன்னா பரிசு வருமா இல்ல அதுக்கும் அல்வாவா? நம்மூரு அம்மணிங்களை நினச்சாலே புல்லரிக்குது போங். அதெப்படி, மாதத்துக்கு ஒரு பதிவுன்னு கொள்கையாங்க்கா?? என்னமோ போங்... நானும் போட்டில குதிச்சுட்டேன்..."தொம்" (குதிச்ச சவுண்டு!!) முத படம் மைதா அல்வா. ரெண்டாவது படம்தேன் கோதுமை அல்வா. ஏன்னா மைதா கொஞ்சம் நல்லா எளகி வருமே. கோதுமை என்னதான் சமத்துன்னு சொன்னாலும் முரண்டு பண்ணியது மாதிரிதேன் நிக்கும். ஹி ஹி...எப்படி என் ஆராய்ச்சி?

srividhya Ravikumar said...

parkarapove asaya iruku suganthi...love it..

மின்மினி RS said...

கோதுமை அல்வா பாக்கும்போதே அப்படியே எடுத்து சாப்பிடணும் போல உள்ளதே.. நல்லா செய்திருக்கீங்க சுகந்தி அக்கா..

எஸ்.கே said...

எளிமையாகவும் அருமையாகவும் இருக்கு!

தெய்வசுகந்தி said...

மேனகா! அல்வா உங்களுக்குதான். கரெக்டா சொல்லிட்டீங்க!

மகி, கரெக்டா தப்பா கெஸ் பண்ணிட்ட. போனாப்போகுது அடுத்த முறை பாத்துக்கலாம்!

நன்றி பிரேமலதா!

அய்யா, கரெக்டா சொல்லிடீங்க. அது வறுத்த முந்திரி இல்லீங்க. கொறை சொல்லறது சரி பண்ணிக்கதானுங்க! தாராளமா சொல்லலாம்.

சித்ரா!! பார்சல் அனுப்பியாச்சு!!

திவ்யாம்மா! இது செஞ்சு 1 வாரத்துக்கு மேல ஆச்சு.

தெய்வசுகந்தி said...

அன்னு, நல்ல ஆராய்ச்சி! நாங்க அவ்வளவு சீக்கிரம் பரிசு கொடுத்துருவோமா? அதுக்கும் அல்வாதான்.

நன்றி ஸ்ரீவித்யா!!

நன்றி மின்மினி!!

நன்றி எஸ்.கே!!

அன்னு said...

//அன்னு, நல்ல ஆராய்ச்சி! நாங்க அவ்வளவு சீக்கிரம் பரிசு கொடுத்துருவோமா? அதுக்கும் அல்வாதான்.//

அடப்பாவி....தெளிவாத்தான் இருக்கீங்க போலா...:))

தெய்வசுகந்தி said...

அன்னு நம்ம ஊர் அம்மணிகளப் பத்தி தப்பா நெனைச்சுட்டீங்களா?

Jaleela Kamal said...

வாயில் வைத்தா அபப்டியே தொணையில் வழுக்கி கொண்டு போய் விடும் போல இருக்கே.

Jaleela Kamal said...

1. கோதுமை ஹல்வா

2. மைதா ஹல்வா

Mrs.Menagasathia said...

ஆஹா நிஜமாவே அலவா எனக்குதானா..உங்க பார்சலை எதிர்ப்பார்க்கிறேன்...

Vijisveg Kitchen said...

சூப்பர் ஹல்வா எல்லாருக்கும் ஹல்வா குடுத்திட்டிங்க.

தீபாவளி வாழ்த்துக்கள்.

Mohideen said...

கோதுமை அல்வா சூப்பரோ சூப்பர்.

Navi Narasimmalu said...

mela irupathu kothumai alva kele irupatbhu than maitha mavu alva inga coorrecta

Related Posts with Thumbnails