தேவையானவை
பாஸ்மதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நீள்வாக்கில் நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
துவரை - 1 கப் (frozen thuvar lilva)
பிரியாணி இலை - சிறிது
ஏலக்காய் - 1
முந்திரி - சிறிது
தேங்காய்ப்பால் - 1 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
அரைக்க
புதினா - 1 கட்டு
மல்லி - 1/2 கட்டு
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 8
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.
செய்முறை
- குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்து பிரியாணி இலை, ஏலக்காய், முந்திரி சேர்த்து வதக்கவும்.
- அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
- முந்திரி சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பிறகு அதில் துவரை சேர்த்து வதக்கி, அரைத்தவற்றை சேர்த்து, உப்பும் சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
- அதில் அரிசி சேர்த்து வதக்கி, தேங்காய்ப்பால் மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி போடவும்.
- 2 விசில் விட்டு இறக்கவும்.
துவரைக்கு பதிலாக, frozen soya bean, அல்லது ஏதாவது ஒரு frozen beans பயன்படுத்தலாம்.