அவகாடோ டிப் (Guacamole)
தேவையானவை:
அவகாடோ - 2
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (விதை நீக்கி பொடியாக நறுக்கியது)
மல்லித்தளை - சிறிது (பொடியாக நறுக்கியது)
ஹாலப்பினோ மிளகாய் - 1 (விதை நீக்கி பொடியாக நறுக்கியது)
உப்பு
மிளகுத்தூள்
எலுமிச்சைசாறு - சிறிது
செய்முறை:
- அவகாடோவை நறுக்கி கொட்டை நீக்கி, அதன் சதைப்பகுதியை வழித்தெடுத்து, அதில் எலுமிச்சை சாறு கலந்து ஒரு ஃபோர்க் கொண்டு மசிக்கவும்.
- அத்துடன் வெங்காயம், மிளகாய், மல்லித்தளை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து நன்றாக மூடி ஃப்ரிஜ்ல் வைக்கவும்
- பரிமாறும் போது தக்காளியை கலந்து பரிமாறவும்.
உங்களுக்கு பிடித்த சிப்ஸ் உடன் சாப்பிடலாம்.
guacamole sandwich
தேவையானவை:
ரொட்டித்துண்டுகள்
அவகாடோ டிப்
ஹம்மஸ் (இது கொண்டைக்கடலையில் செய்தது. எல்லா கடையிலும் கிடைக்கும். நிறைய veriety கிடைக்கும். நான் உபயோகித்தது Garden vegetable hommus)
செய்முறை:
- ஒரு ரொட்டியின் ஒரு புறம் அவகாடோ டிப்பை தடவவும்.
- இன்னொரு ரொட்டியின் ஒரு புறம் ஹம்மஸ்ஸை தடவவும்.
- இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும்.
சமைக்க நேரம்/விருப்பம் இல்லாத நாள்களில் sandwich+ fruits ஒரு நல்ல dinner. நேற்று இரவு சமைக்க விருப்பம் இல்லாததால் இதுவும் fruit salad ம் சாப்பிட்டோம்.
16 பேர் ருசி பாத்துட்டாங்க:
Superb...Really healthy dip and sandwich...I like avacoda very much...Never combined hummus with gucamole...Try this sandwich this week..
சூப்பர்.உங்கள் சமையலறை அழகோ அழகு.
நன்றி கீதா! அவகாடோ எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
நன்றி ஆசியா!!!!
பாக்கறதுக்கு நல்லாருக்கு, எப்போ சாப்பிடக் கிடைக்குமோ?
Chipotle ஞாபகம் வருதே..சூப்பரா இருக்கு ரெண்டு டிஷ்-ம்!
என்னை மாதிரி பேச்சிலர்களுக்கு இது போன்ற சாண்ட்விச்கள் தான் வரப்பிரசாதம். இது மாதிரி எதையாவது தின்னுட்டு க்ளாஸூக்கு ஓடுனாத் தான் உண்டு. உங்க கிட்ட இருந்து இன்னும் இது மாதிரி நோகாமல் நோன்பு கும்பிடும் சங்கதிகளை எதிர்பார்க்கிறோம்...
Wow avacoda sandwich and dip, simply superb . I think I must start blogging in tamil too to keep in touch with the language.Its good to see u guys blogging in tamil.
ரொம்ப நல்ல ஐடியா, ஹம்முஸ் வித் அவகோடா சாண்ட்விச்.
மிகவும் அருமையாக இருக்கு....
ஆஸ்டின் வாங்க கவுண்டரே கிடைக்கும் :-)
நன்றி சித்ரா!!
நன்றி மஹி
நன்றி பிரசன்னா ராஜன்!! இந்த மாதிரி நிறைய spreadsஐ மாத்தி மாத்தி தடவுனீங்கன்னா நிறைய veriety of sandwich கிடைக்கும்.!!!!!
நன்றி பவித்ரா!!! அதனாலதாங்க நானும் தமிழ் ப்ளாக் எழுதறேன். வாங்க சீக்கிரமே எழுத ஆரம்பிங்க!!!!
நன்றி ஜலீலா!!!
நன்றி மேனகா!!!
suganthi,variety varietyaa pottu Asathureenga.
Thanks Shanthi
அவக்காடோ மற்றும் க்வக்கமோலே எனக்குப் பிடித்தமானது.
//ஆஸ்டின் வாங்க கவுண்டரே கிடைக்கும் :-)//
அய்யா பெங்களூரு வாங்க. இங்கயே சூப்பர்மார்க்கட் கடைகளில் கிடைக்கிது. Avacado-வின் இந்தியப் பெயர் Butter fruit.
ஓ சொல்ல மறந்திட்டேன். சமையல் குறிப்பு நன்றாக இருந்தது.
நன்றி இந்தியன்!!
Post a Comment