Sunday, April 18, 2010

கோதுமை மாவு போண்டா

தமிழ் குடும்பம் சைட்ல பொள்ளாச்சி போண்டா பார்த்ததும்தான், அட இது நமக்கு புடிச்ச போண்டாவாச்சேன்னு ஞாபகம் வந்தது. ஆனா செய்யற விதம் கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். நான் சின்னதா இருக்கறப்போ வீட்டுக்கு யாராவது திடீர் விருந்தாளி வந்தால் அம்மா இதுதான் செய்வாங்க. அம்மா கோதுமை மாவுலயும் செய்வாங்க.
தேவையானவை

கோதுமை மாவு - 2 கப்
இட்லி மாவு- 2 குழி கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 15(அல்லது தேவைக்கேற்ப)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 துண்டு
கொத்தமல்லி தழை - சிறிது
சோடா உப்பு - 1 சிட்டிகை
உப்பு
எண்ணெய்


செய்முறை
  • வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி அனைத்தையும் பொட்டியாக நறுக்கி வைக்கவும்.
  • கோதுமை மாவுடன் உப்பு, இட்லி மாவு மற்றும் நறுக்கிய பொருள்கள் சேர்த்து சிறிது நீ சேர்த்து தளர பிசையவும்.
  • சப்பாத்தி மாவு மாதிரி கெட்டியாவும் இருக்க கூடாது, இட்லி மாவு மாதிரியும் இருக்க கூடாது, இரண்டுக்கும் நடுவில் உள்ள பதத்திற்கு பிசையவும்.
  • கடாயில் எண்ணெயை காய வைத்து சிறிது சிறிதாக கிள்ளி போட்டு வேக விட்டு எடுக்கவும்.

தேங்காய் சட்னியோட சாப்பிட நல்லா இருக்கும். சும்மாவும் சாப்பிடலாம்.

இதுவே மைதா மாவிலும் செய்யலாம்.

19 பேர் ருசி பாத்துட்டாங்க:

தெய்வசுகந்தி said...

நன்றி அம்மு மது

எல் கே said...

அட நம்ம ஊரு அம்மணி . நமக்கும் கோவை பக்கம் தாங்க. இந்த மாதிர போண்டாலாம் இப்ப யாருங்க பண்றாங்க.பசிச்சா, pizza or burger இதான் சாப்டறாங்க.

தெய்வசுகந்தி said...

LK சரியா சொன்னீங்க!!. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!

Pavithra Srihari said...

ha.. enga MIL kooda itha pannuvaanga .. aana athukkulla cabbage poduvaanga .. naanum ippo cbe ponnuthaanungo

Jaleela Kamal said...

. ரொம்ப நல்ல இருக்கு திவ்ய சுகந்தி, நிமிஷத்தில் ரெடி பண்ணிடலாம் இல்லையா?

GEETHA ACHAL said...

மிக மிக அருமையான போண்டா..பார்க்கும் பொழுதே ஆசையினை தூண்டிவிட்டிங்க்ளே...really superb...

தெய்வசுகந்தி said...

பவித்ரா வாங்க!! நம்ம ஊருகாரங்களை சந்திக்கறது சந்தோஷம். நன்றி!!

ஆமாங்க ஜலீலா. உடனே செஞ்சுடலாம். அப்புறம் என் பேரு தெய்வசுகந்தி. நீங்க சுகந்தின்னே சொல்லலாம். நன்றி!!!

நன்றி கீதா! ஈசியும் கூட.

Menaga Sathia said...

எங்கம்மாவும் இதேபோல் செய்வாங்க ஆனா இட்லிமாவு சேர்க்கமாட்டாங்க.வெறும் கோதுமை மாவில் மட்டும் செய்வாங்க.ஞாபகபடுத்திட்டீங்க சுகந்தி.படத்தை பார்த்ததும் எடுத்து சாப்பிடனும்போல் இருக்கு,அருமை!!

தெய்வசுகந்தி said...

நன்றி மேனகா! உடனே செஞ்சு சாப்பிடுங்க!!

Chitra said...

mmmmm..... yummy.

தெய்வசுகந்தி said...

Thanks Chitra!

எல் கே said...

no update for one week?>>

தெய்வசுகந்தி said...

I'm not feeling well(allergies). Thanks for checking.

எல் கே said...

take care of ur health. wish you a speedy recovery

தெய்வசுகந்தி said...

நன்றி LK

ராமலக்ஷ்மி said...

மைதாவில் சாப்பிட்டிருக்கிறேன். கோதுமை மாவில் செய்து பார்க்கிறேன். நன்றி.

தெய்வசுகந்தி said...

நன்றி ராமலக்ஷ்மி!!!!

Jaleela Kamal said...

சுகந்தி ஒகே பா

Unknown said...

தமிழ்குடும்பத்தை குறிப்பிட்டமைக்கு நன்றி சுகந்தி

தாங்களும் எங்களுடன் இணைந்தால் மிக்க மகிழ்ச்சியடைவோம்
www.tamilkudumbam.com

Related Posts with Thumbnails